தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கையெழுத்து. பின்னனி இதுதான்

  • IndiaGlitz, [Monday,March 27 2017]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்தது. ஆனால் அப்பகுதி மக்கள் இந்த திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கினர். திரையுலகினர் உள்பட அனைத்து துறையினர்களும் இந்த போராட்டத்திற்கு ஜல்லிக்கட்டு போராட்டம் போல் ஆதரவு கொடுத்தனர்
பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் நெடுவாசல் மக்களின் சம்மதம் இன்றி இந்த திட்டம் நிறைவேற்றப்படாது என்று மத்திய அரசு உறுதிமொழி கொடுத்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில் இன்று ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக 31 நிறுனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த திட்டத்தை ஜெம் லெபாரெட்ரிக்ஸ் என்ற நிறுவனம் செயல்படுத்தும் என ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், கொடுத்த வாக்குறுதியையும் மீறி மத்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது நெடுவாசல் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்நிலையில் இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தும் ஜெம் லாபரடரீஸ் நிறுவனம் கர்நாடகத்தைச் பாஜக ராஜ்யசபா எம்.பி. சித்தேஸ்வராவின் குடும்பத்துக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. பாஜக எம்பியின் சொந்த நிறுவனம் லாபம் பெற, தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த திட்டத்தை எதிர்த்து மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக நெடுவாசல் மக்கள் தெரிவித்துள்ளனர்.

More News

'காற்று வெளியிடை' சஸ்பென்ஸை உடைத்த பிரிட்டிஷ் சென்சார்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதிராவ் ஹைதி நடித்துள்ள 'காற்று வெளியிட' திரைப்படம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

த்ரிஷாவுக்கு நன்றி, பாராட்டு தெரிவித்த அரவிந்தசாமி

நட்டி நட்ராஜ் நடித்த 'சதுரங்க வேட்டை' திரைப்படம் கிராமப் பகுதிகளில் நடக்கும் ஊழலை எடுத்துக் கூறும் படமாக இருந்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகமான 'சதுரங்க வேட்டை 2' திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றங்களை செய்வதை மையமாகக் கொண்டு உருவாகி வந்தது

பிரபல அரசியல்வாதிக்கு லைகா நிறுவனம் அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸ்

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் இலங்கையில் ஏற்பாடு செய்திருந்த ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள முதலில் ஒப்புக்கொண்டிருந்த ரஜினிகாந்த், பின்னர் தமிழக அரசியல்வாதிகள் சிலர் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக விழாவில் கலந்து கொள்ளும் திட்டத்தை ரத்து செய்தார்.

10 வருடங்களுக்கு பின் அஜித் பட இயக்குனரின் அடுத்த படம்

அஜித், அசின் நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'ஆழ்வார்'. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாதால் இந்த படம் வெளிவந்து பத்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இந்த படத்தின் இயக்குனர் ஷெல்லாவிற்கு வேறு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. இடையில் இரண்டு படங்களை இவர் இயக்குவதாக இருந்து பின்னர் அவை கைவிடப்பட்டது...

ஆதார் அட்டை கட்டாயமா? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

இந்திய குடிமகன் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று அவ்வப்போது வெளிவரும் அரசின் உத்தரவுகள் உறுதி செய்து வருகிறது.