டுவிட்டரின் லோகோவை திடீரென மாற்றிய எலான் மஸ்க்.. என்ன காரணம்?
- IndiaGlitz, [Tuesday,April 04 2023]
கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய எலான் மஸ்க் அவ்வப்போது பல அதிரடி மாற்றங்களை செய்து வரும் நிலையில் தற்போது திடீரென ட்விட்டர் லோகோவை மாற்றியுள்ளார்.
ட்விட்டர் என்றாலே அனைவரும் குருவி லோகோ தான் ஞாபகம் இருக்கும் நிலையில் தற்போது நாய் படத்தை லோகோவை அவர் மாற்றி உள்ளார். கடந்த சில நாட்களாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் டோஜ் காயின் என்ற கிரிப்டோகரன்சி குறித்து பேசி வருகிறார். இதன் காரணமாக இந்த கிரிப்டோ கரன்சியின் மதிப்பு சுமார் 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டோஜ் காயின் என்ற கிரிப்டோகரன்ஸி இன் லோகோவான நாய் புகைப்படத்தை டுவிட்டருக்கும் அவர் லோகோவாக மாற்றியுள்ளார். இந்த தகவலை அவர் ஒரு மீம்ஸ் மூலம் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ள நிலையில் இந்த புதிய லோகோவுக்கு கடும் அதிருப்தி பயனர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியிலிருந்து விலகிய எலான் மஸ்க், அதற்கு பதிலாக நாய் ஒன்றை நியமிக்க இருப்பது போன்ற டுவிட்டை பதிவு செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.