40 வயதிற்கு மேலுள்ள பெண்கள் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா காலத்தில் ஒருசிலர் வொர்க்அவுட், ஜிம் என்று தங்களுடைய வாழ்க்கை முறை செழுமையாக மாற்றி அமைத்திருக்கின்றனர். இதில் பல சினிமா நட்சத்திரங்கள் தங்களுடைய ஒட்டுமொத்த நேரத்தையும் யோகா, வொர்அவுட்டிற்கு ஒதுக்கி தங்களுடைய கெரியரில் ஒரு புது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
இன்னும் சிலர் ஓயாமல் சாப்பிட்டு, தூங்கி வழிந்து, உடல் எடை அதிகரித்து காணப்படுகின்றனர். இது இயல்பாக நடக்கிற விஷயம்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் 40 வயதைக் கடக்கும் பெண்கள் பெரும்பாலும் உடல் எடை அதிகரித்து காணப்படுவதற்கு இதுமட்டுமே காரணமல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒருநபர் தனது உடல் எடை அதிகரிப்புக்கு என்ன காரணம் எனத் தெரிந்துகொண்டால் அதை எளிதாகக் குறைப்பதற்கும் அதிலிருந்து வெளியே வருவதற்கும் உதவியாக இருக்கும். அந்த வகையில் 40 வயதைக் கடந்த பெண்கள் ஏன் பெரும்பாலும் உடல் எடை அதிகரித்து விடுகின்றனர் என்று நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
அதிகபடியான பசி- 40 வயதை நெருங்கும் பெண்கள் பலருக்கு மெனோபாஸ்க்கு உரிய அறிகுறிகள் தோன்றிவிடுகிறது. இதனால் பதற்றம், மனநிலை மாற்றத்தை உணருகின்றனர். இதைப் போக்கிக் கொள்வதற்கு பெரும்பாலான பெண்கள் தங்களை அறியாமலேயே சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துகின்றனர். இதனால் உடல்எடை அதிகரித்துவிடுகிறது.
மேலும் மெனோபாஸ் மாற்றங்களால் பெரும்பாலான பெண்கள் தங்களின் உடலில் ஹார்மோன் சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதனாலும் அதிகபடியான பசி உணர்வு ஏற்படுகிறது. இந்தப் பசி உணர்வினால் அதிகம் சாப்பிட்டு, உடல் எடை அதிகரித்து, சில நேரங்களில் உடல்நலப் பிரச்சனைகள் தோன்றுவதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.
சர்க்கரை அதிகமுள்ள உணவுகள்- ஒரு குறிப்பிட்ட வயது கடந்த பிறகு அதிகம் சர்க்கரை கொண்ட உணவுகளை உட்கொள்வதால் உடலில் இன்சுலின் அளவு அதிகரித்து உடல்எடை அதிகரிக்கிறது. மேலும் டைப் 2 நீரிழிவு நோய்க்கும் இது வழிவகுத்து விடுகிறது. இதற்காக முற்றிலும் சர்க்கரை நீக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டாலும் அப்போதும் பிரச்சனை வெடிக்கத்தான் செய்யும். எனவே உணவில் சர்க்கரையின் அளவு மிதமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம். அதிலும் 40 வயதைக் கடக்கும் பெண்களுக்கு இது முற்றிலும் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறைந்த புரோஜெட்டிரோன் அளவுகள்- உடலில் பல்வேறு செயல்பாடுகளை கொண்ட என்சைம்களில் எதாவது ஒன்று அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ அதுவும் உடலுக்கு எதோ ஒருவகையில் சிக்கலை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் புரோஜெட்டிரோன் அளவும் ஒருவரது உடல்எடை அதிகரிப்புக்கு மறைமுக காரணமாக அமைந்து விடுகிறது.
இதைத்தவிர உடலில் வீக்கம் ஏற்பட்டதைப் போலவும் கனமாக இருப்பதைப் போலவும் உணருவதற்கு இந்த புரோஜெட்ரோன் அளவுகள்தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். மேலும் ஜீரணம் ஆகாமல் நெஞ்செரிச்சல், வயிற்று உப்பசம் போன்ற குறைபாடு ஏற்படும்போது 40 வயதைக் கடந்த பெண்கள் அவசியம் வீட்டு மருந்துகளை எடுத்துக்கொள்வதும் அவசியம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments