ஏன் பெண்கள் ஆண்களைவிட நீண்டகாலம் வாழ்கிறார்கள்? - ஹெலன் பிரிக்ஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
காலமாற்றத்தாலும் உணவுமுறைகளாலும் மனிதனது ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகின்றன. இந்நிலையில் பெண்களைவிட ஆண்களே குறைவான ஆயுட்காலத்தில் இறக்கின்றனர் என்று ஒரு ஜப்பானிய ஆய்வு கூறுகிறது.
பெண்களின் நோய் எதிர்ப்பு அமைப்புகள் மெதுவாக வயதாவதால் பெண்கள் ஆண்களைவிட நீண்டகாலம் உயிர்வாழ்கின்றனர். ஆண்களின் நோய் எதிர்ப்பு அமைப்புகள் விரைவிலேயே வயதாகும் தன்மைக் கொண்டவை. எனவே ஆண்களுக்கு மிக எளிதாக நோய்கள் வருவதற்கும் நோய்த் தொற்றுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. இந்த நோய் எதிர்ப்பு அமைப்பின் சோதனைகள் உண்மையில் உயிர்களின் வயதை நிர்ணயிக்கும் காரணிகளாக அமைகிறது. நோய் எதிர்ப்பு அமைப்பானது உடலைத் தொற்றுகளில் இருந்தும் புற்று நோய்களிலிருந்தும் பாதுகாக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. ஆனால் நோய் எதிர்ப்பு அமைப்புகள் செயலிழக்கும் போதோ அல்லது ஒழுங்காகக் கட்டுப்படுத்தாதபோதோ உடலில் நோயை ஏற்படுத்துகின்றன.
டோக்கியோ மருத்துவ மற்றும் பல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கட்சுயுகு மற்றும் அவருடன் பணிபுரிகின்ற பேராசிரியர்கள் 20 முதல் 90 வயதுக்குட்பட்ட 356 ஆரோக்கியமான ஆண்கள் மற்றும் பெண்களின் இரத்த மாதிரிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் சைட்டோகைன்கள் எனப்படும் மூலக்கூறுகளின் அளவை அளந்தனர். இந்த மூலக்கூறுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் உயிரணுக்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன என்பதை இந்த ஆய்வில் உறுதிப்படுத்தினர்.
நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கியக் கூறான மனிதனது உடலைத் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் டி - செல்கள் மற்றும் ஆண்டிபயாடிகளைச் சுரக்கும் பி - செல்களின் எண்ணிக்கைகளே ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகையான வேறுபாடாக அமைந்திருக்கிறது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் டி- செல்கள் மற்றும் பி – செல்களின் வீழ்ச்சி விகிதம் ஆண்களிடம் வேகமாகக் காணப்படுகிறது என்பதும் உறுதியாகிறது. இதற்கு மாறாக இந்த இரு செல்களின் வளர்ச்சி விகிதம் பெண்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையானது மனிதனது வயதைக் குறைப்பதில் முக்கியக் காரணியாக அமைகின்றன என்பதையும் இந்த ஆய்வு உறுதிப்படுத்தியது.
நோயெதிர்ப்பு மூலக்கூறுகளின் அளவினைப் பொறுத்து ஆயுட்காலம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசப்படுகின்றன என்பதனை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. இயற்கையிலிலேயே ஆண்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆயுட்காலம் குறைவாக இருக்கின்ற நிலையில் தற்போதைய உணவு முறைகளும் தட்பவெட்ப நிலைமைகளும் மேலும் சிக்கலை உருவாக்கிவிடுகின்றன. இதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்குக் கூடிய வரையிலும் இயற்கையான உணவினையும் வாழ்நிலையையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com
Comments