குடியை ஏன் அம்மா துணையா தேர்ந்தெடுத்தீங்க..... நடிகையர் திலகம் குறித்து ஜெயசித்ரா

  • IndiaGlitz, [Thursday,January 01 1970]

நடிகை ஜெயசித்ரா மாட்டுக்கார வேலன் படத்தில்தான் முதன்முதலாக அறிமுகமானார். நாயகி, குணச்சித்திர நடிகை என தமிழிலும், தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். தமிழக அரசால் கலைமாமணி விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டவர்.

இங்க எல்லாரும் உஷாரா இருந்துட்டங்க.. நீங்க ஏன் அம்மா உஷாரா இல்லாம போயிட்டீங்க . உங்க வாழ்க்கைத்துணையா குடியை ஏன் தேர்ந்தெடுத்தீங்க என நடிகையர் திலகம் சாவித்ரியிடம் கேள்வி கேட்டுள்ளார் கலைமாமணி நடிகை ஜெயசித்ரா.

கலைமாமணி நடிகை ஜெயசித்ரா indiaglitz classic நேயர்களுக்கு அளித்த பேட்டியில் நடிகையர் திலகம் சாவித்ரி குறித்தும், நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த சாவித்ரி பயோ பிக் படம் குறித்தும் பேசியுள்ளார்.

அந்த பேட்டியில் ,

சாவித்ரி அம்மானா நடிகையர் திலகம், அழகு, நடிப்பு, டயலாக் டிக்ஷன்னு சொல்லிகிட்டே போகலாம்.


பாசமலர் படத்துல தங்கையா நடிச்சிருப்பாங்க. அதில மலர்ந்தும் மலராத பாடல்ல ஒரு ஸீன்ல கண்ணீர் வரும் Glycerin இல்லாம பண்ணிருப்பாங்க.

கந்தன் கருணை படத்துல, சொல்ல சொல்ல இனிக்குதடா பாடல் நீங்க பாடுறீங்களா இல்ல ஜானகி அம்மா பாடுறாங்களாங்குற சந்தேகம் வரும்.

சரஸ்வதி சபதத்துல சரஸ்வதியாவே நடிச்சிருப்பங்க.

சாவித்ரி அம்மா சொல்லிதா, இந்த படத்தை டைரக்டர் எடுத்துருக்கார். இந்த படத்துல சாவித்ரி அம்மாவா கீர்த்தி சுரேஷ் நடிச்சிருக்காங்க. அந்த பொண்ணு சாவித்ரி அம்மா பேரை காப்பாத்தும். படத்துல ரெண்டு இடத்துல அப்டியே சாவித்ரி அம்மாவை பார்த்ததுபோல் இருந்துது.

இங்க எல்லாரும் உஷாரா இருந்துட்டங்க.. நீங்க ஏன் அம்மா உஷாரா இல்லாம போயிட்டீங்க . உங்க வாழ்க்கைத்துணையா குடியை ஏன் தேர்ந்தெடுத்தீங்க. நீங்க ஒரு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துருக்கலாம். நீங்க தன்னந் தனியா இருந்துட்டீங்க . உங்க வாழ்க்கைதான் இங்க பலருக்கு உதாரணமா இருந்திருக்கு.

படம் பார்த்து இரண்டுநாள் எனக்கு அந்த தாக்கம் இருந்தது. இப்போ நிம்மதியா இருக்கேன். நான் உங்ககிட்ட இப்போ பேசிட்டுதான் இருக்கேன் அம்மா.

சாவித்ரி அம்மா வாழ்க்கைல நடந்ததா, படமா எடுத்திருக்காங்க.

என இந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

More News

அரசியல் வாதிகளின் Bio pic எடுத்தா நாறிப்போயிடும் சௌகார் ஜானகி சொல்லும் உண்மை

சௌகார் ஜானகி தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை. 1931 ல் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரியில் பிறந்தவர். நாயகியாகவும்,

மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் - பர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'வேட்டையன்' ரன்னிங் டைம் இவ்வளவா? என்ன சர்டிபிகேட்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "வேட்டையன்" திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ரஜினியின் 'வேட்டையன்' படத்துடன் மோதுகிறதா இந்த படம்? விரைவில் அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அதே தேதியில் இன்னொரு திரைப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும்,

'ஜெயிச்சிருச்சு மாறா': சமீபத்தில் வெளியான படத்தை பாராட்டி தமிழில் ட்விட் போட்ட ஹர்பஜன் சிங்

'கிரிக்கெட் மீது நீங்க வச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா' என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழில் தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் பதிவு செய்ததை அடுத்து அந்த ட்வீட் தற்போது இணையத்தில்