செளந்தர்யா திருமண நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொள்ளாதது ஏன்?
- IndiaGlitz, [Saturday,February 09 2019]
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் செளந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னை ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரஜினியின் நெருங்கிய மற்றும் தூரத்து உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களும் இணையத்தில் நேற்று வைரலாகி சமூக வலைத்தளங்களின் டிரண்டுக்கு வந்தது. ஆனால் இந்த புகைப்படங்களில் ஒன்றில்கூட ரஜினியின் மூத்த மருமகன் தனுஷ் இல்லாதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அசுரன்' படப்பிடிப்பில் தனுஷ் பிசியாக இருந்ததாகவும், அதனால் நிகழ்ச்சிக்கு அவர் தாமதமாக வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் மணமக்களுடன் தனுஷ் எடுத்த ஒரு புகைப்படம் கூட கடைசி வரை வெளியாகாததால் இன்னும் சில நெட்டிசன்கள் அவர் இந்த நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை என்றே கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.