செளந்தர்யா திருமண நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொள்ளாதது ஏன்?

  • IndiaGlitz, [Saturday,February 09 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் செளந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னை ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரஜினியின் நெருங்கிய மற்றும் தூரத்து உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களும் இணையத்தில் நேற்று வைரலாகி சமூக வலைத்தளங்களின் டிரண்டுக்கு வந்தது. ஆனால் இந்த புகைப்படங்களில் ஒன்றில்கூட ரஜினியின் மூத்த மருமகன் தனுஷ் இல்லாதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அசுரன்' படப்பிடிப்பில் தனுஷ் பிசியாக இருந்ததாகவும், அதனால் நிகழ்ச்சிக்கு அவர் தாமதமாக வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் மணமக்களுடன் தனுஷ் எடுத்த ஒரு புகைப்படம் கூட கடைசி வரை வெளியாகாததால் இன்னும் சில நெட்டிசன்கள் அவர் இந்த நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை என்றே கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.


 

More News

ஒரே படத்தில் பாரதிராஜா, பாக்யராஜ் மற்றும் பார்த்திபன்

இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் அவருடைய சிஷ்யர் பாக்யராஜூம், அவருடைய சிஷ்யர் பார்த்திபனும் ஒரே படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'என்.ஜி.கே' டீசர் ரிலீஸ் குறித்த புதிய அப்டேட்

சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரித்திசிங் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது

விரைவில் வெளியாகவுள்ள 'ஸ்ரீரெட்டி டைரி" திரையுலகினர் அதிர்ச்சி

கோலிவுட் மற்றும் டோலிவுட் பிரபலங்கள் பலர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பலருடைய முகத்திரையை கிழிக்கும் வகையில்

'பியார் பிரேமா காதல்' பட பாணியில் லிப்டில் லிப்கிஸ் கொடுத்த காதலர்கள்

'பியார் பிரேமா காதல்' படத்தில் லிப்டில் செல்லும்போது ஹரிஷ் கல்யாண், ரைசா இருவரும் மாறி மாறி லிப்கிஸ் கொடுக்கும் காட்சி உள்ளது. லிப்ட்டை மேலேயும் கிழேயும் இறக்கி முத்தமழை பொழியும் இந்த காட்சி

சேரனின் 'திருமணம்' சென்சார் தகவல்கள்

பிரபல இயக்குனர் சேரன் 'பாரதி கண்ணம்மா'வில் தொடங்கி பல வெற்றிப்படங்களை இயக்கிய நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பின் அவர் இயக்கியுள்ள திரைப்படம் 'திருமணம்'