நிவர் புயலுக்கு பெயரை தேர்ந்தெடுத்தது யார்???
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு அதை ஒட்டியுள்ள வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஈரான், கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் உள்ளிட்ட 13 நாடுகள் பெயர்களை பரிந்துரை செய்யலாம். அதில் ஒவ்வொரு நாடும் 13 பெயர்களை பரிந்துரை செய்து உலக வானிலை ஆராய்ச்சி அமைப்புக்கு அனுப்பி வைப்பர். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள் தான் வரிசைப்படி அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு பெயர்களாக வைக்கப்படும்.
இதில் ஒவ்வொரு நாடும் 13 பெயர்களை பரிந்துரை செய்வதற்கு நிறைய நிபந்தனைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அரசியல், கலாச்சாரம், மத நம்பிக்கை என எதுவும் கலக்காமல் புயல்களுக்கான பெயர்கள் பொதுவாக இருக்க வேண்டும். மேலும் அந்தப் பெயரின் அளவு அதிகப்பட்சமாக 8 எழுத்தாக இருக்கலாம். மேலும் அந்தப் பெயரை அனைத்துத் தரப்பு மக்களும் எளிதாக உச்சரிக்கும் படியும் இந்தப் பெயர்கள் அமைந்திருக்க வேண்டும். அதேபோல ஒருமுறை உருவான புயலுக்கு ஒரு பெயர் வழங்கப்பட்டு விட்டால் அந்தப் பெயர் மீண்டும் பயன்படுத்தப்படாது.
இதுவரை 13 நாடுகளும் பரிந்துரை செய்த ஒட்டுமொத்தப் பெயர்கள் எண்ணிக்கை 169. அந்தப் பட்டியல் ஆல்ஃபட்டிகல் ஆர்டரில் இருக்கிறது. தற்போது ஈரான் நாட்டு பெயர் பட்டியல் நடைமுறையில் இருப்பதால் அவர்கள் தேர்ந்தெடுக்க நிவர் புயல் வங்களா விரிகுடா பகுதியில் மையம் கெண்டுள்ள புதிய புயலுக்கு பெயராக வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல இந்தியாவும் இந்தப் பெயர் பட்டியலுக்கு கதி, தேஜ், முரசு, ஆக், நிர் போன்ற பெயர்களை பரிந்துரை செய்திருக்கிறது. இதனால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு வரப்போகும் புதிய புயல்களுக்கான பெயர்ப் பட்டியல் தற்போது உலக வானிலை ஆராயச்சி மையத்தில் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments