இந்தியாவில் கொரோனா ஏன் பரவவில்லை? சூர்யா-கார்த்தி பட நடிகை விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் சீனாவுக்கு அருகில் இந்தியா இருந்தும் இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக தாக்குதல் இல்லாதது ஏன் என்பது குறித்து சூர்யா நடித்த ’மாஸ்’மற்றும் கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகை பிரணிதா தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
இந்துக்கள் மற்றவர்களுடன் கைகொடுக்காமல் கையை கும்பிட்டு வணக்கம் சொன்னபோது பலர் சிரித்தார்கள், வீட்டுக்குள் நுழையும் முன்னர் கைகால்களை கழுவி விட்டு சென்றதை பார்த்து சிரித்தார்கள், மரங்களை காடுகளை, விலங்குகளை வணங்குவதை பார்த்து சிரித்தார்கள், சைவ உணவை இந்துக்கள் சாப்பிடுவதைப் பார்த்து சிரித்தார்கள், யோகா செய்வதை பார்த்து சிரித்தார்கள், இறந்தவர்களை எரிக்கும் வழக்கத்தை பார்த்து சிரித்தார்கள், இறுதிச்சடங்கு முடிந்த பின்னர் குளிக்கும் வழக்கத்தை கொண்டிருக்கும் இந்துக்களைப் பார்த்து சிரித்தார்கள். ஆனால் இப்போது யாரும் சிரிக்கவில்லை. ஏனெனில் இவை தான் கொரோனா வைரசை பரவாமல் தடுக்க காரணங்கள் ஆகும் என்று பிரணிதா கூறியுள்ளார் நடிகை பிரணிதாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Despite the geographical proximity to China, India has very few cases per million of #Covid19.
— Pranitha Subhash (@pranitasubhash) March 18, 2020
Like it or not, our habits, traditions play an important role in health and hygiene. #Hinduism . pic.twitter.com/rLQaYyAzzP
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments