கோவை சரளா திருமணம் செய்யாததற்கு இப்படி ஒரு காரணமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் காமெடி நடிகைகளில் ஒருவர் கோவை சரளா என்பதும் கடந்த பல ஆண்டுகளாக இவர் தமிழ் தெலுங்கு மொழிகளில் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
விஜயகுமார், கே ஆர் விஜயா நடித்த ’வெள்ளி ரதம்’ என்ற திரைப்படத்தில் இவர் அறிமுகமாகும் போது இவருக்கு வயது 15 என்பதும், அதேபோல் ’முந்தானை முடிச்சு’ படத்தில் இவர் கர்ப்பிணி வேடத்தில் நடித்தபோது இவரது வயது 16 என்பதும். அதற்கு அடுத்து ’சின்னவீடு படத்தில் பாக்யராஜ் அம்மாவாக 65 வயது தாய் கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகையான இவர் திருமணமே செய்யவில்லை என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாகும். கோவை சரளாவுக்கு நான்கு சகோதரிகள் மட்டும் ஒரு சகோதரர் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து அவர்களின் குழந்தைகளை படிக்க வைப்பதையே தனது வாழ்நாள் கடமையாக அவர் ஏற்று கொண்டதால் திருமணமே அவர் செய்து கொள்ளவில்லை. சகோதர சகோதரிகளின் குழந்தைகளை தன்னுடைய குழந்தையாக நினைத்து கோவை சரளா வளர்த்து வருகிறார். மேலும் ஆதரவற்ற ஆசிரமங்களுக்கும் அவர் தொடர்ந்து உதவி செய்து வருவதார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தன்னுடைய வாழ்க்கையை பிறருக்காகவே அவர் அர்ப்பணித்து கொண்டதால் தான் திருமணம் செய்யவில்லை என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கோவை சரளா கூறியுள்ளார். இந்த தகவலை கேட்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். தன்னுடைய குடும்பத்திற்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்த கோவை சரளா மீது அவர் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகை என்பதையும் தாண்டி அவர் மீது மதிப்பும் மரியாதையும் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments