உலகின் மிகப்பெரிய கல்லறை குறித்த சில மர்மத் தகவல்கள்!!!

  • IndiaGlitz, [Tuesday,November 24 2020]

 

சீனப்பெருஞ் சுவர் தான் உலகின் மிகப்பெரிய கல்லறை என அழைப்படுகிறது என்ற தகவலை கேட்டால் தலையே சுற்றலாம். இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியாவிட்டாலும் சீனப் பெருஞ்சுவரை சில வரலாற்று ஆய்வாளர்கள் உலகின் மிகப்பெரிய கல்லறை என்றே குறிப்பிடுகின்றனர். காரணம் இந்தக் கல்லறையை கட்டி முடிப்பதற்குள் 10 லட்சம் பேர் வரை இறந்து இருக்கலாம் எனவும் அவர்கள் அந்த சுவருக்கு அடியிலேயே புதைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

சீனப் பெருஞ்சுவரைக் குறித்து சில சுவாரசியத் தகவல்கள் இன்னும் இருக்கின்றன. உலகிலேயே மிகவும் நீளமான சுவர். அதுவும் நாட்டிற்கே எல்லையாக அமைக்கப்பட்டு இருக்கும் இந்தச் சுவரை யாராலும் தாண்டிச் செல்ல முடியாது எனக் கருதப்படுகிறது. ஆனால் கி.பி.1211 ஆம் ஆண்டு மங்கோலிய ஆட்சிக் காலத்தில் செங்கிஸ்கான் இந்த சுவரின் ஒரு பகுதியை உடைத்துக் கொண்டு சீனாவிற்கு உள்ளே படையெடுத்து சென்றிருக்கிறான்.

மேலும் உலகின் நீளமானது மட்டுமல்ல, மிக அகலமான சுவராகவும் இது இருக்கிறது என்பது பெரும்பாலானோருக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. ஒரே நேரத்தில் 5 வீரர்கள் அல்லது 10 குதிரைகள் இந்த சுவரில் நடந்து செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.கடந்த 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்தச் சுவரின் நீளம் 8,850 கி.மீ எனக் கூறப்பட்டு இருந்தது. ஆனால் இந்தக் கணக்கு தவறு என்பதை கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றொரு மதிப்பீடு தெளிவுப் படுத்தி இருக்கிறது.

ஒட்டுமொத்த சீனப் பெருஞ்சுவரின் நீளம் 21,196 கி.மீ. உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தச் சுவரை சீனர்கள் வின் லி சாங் செங் அதாவது great wall of china என அழைக்கின்றனர். மேலும் இது ஒரு மன்னனின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது அல்ல. இதன் கட்டடிட வடிவமைப்பு பல மன்னர் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த ஒன்று என்றும் வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் இந்தச் சுவர் கின்ஷீ ஹீ வாவ் மன்னனின் ஆட்சிக் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்டது என ஒரு சிலர் கூறிவருகின்றனர். ஆனால் இந்த மன்னன் தனது நாட்டு எல்லையை வரையறைப்படுத்த விரும்பினான். ஆனால் அவனுடைய ஆட்சிக்காலத்தில் இதைச்செய்ய முடியாமல் போனது. இந்த மன்னனுக்கு 100 ஆண்டுகள் கழித்தே இந்த சுவர் கட்டும் பணி துவங்கியது என ஒருசில வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கி.மு.5 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் பணி கி.பி 16 ஆம் நூற்றாண்டு வரை நீடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் இதன் ஒட்டுமொத்த கட்டுமான பணி 400 அல்லது 1000 ஆயிரம் ஆண்டுகளைக் கூட தாண்டலாம் என இருவேறு கருத்துகள் இருந்து வருகிறது. இந்தச் சுவரை முழுவதும் கட்டி முடிக்க 20 லட்சம் பணியாளர்கள் வேலை பார்த்தார்கள் என்றும் அதில் 10 லட்சம் பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. மேலும் உயிரிழந்தவர்களை அந்த சுவருக்கு அடியிலேயே புதைத்து இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அடிப்படையில்தான் சீனப் பெருஞ்சுவர் உலகின் மிகப்பெரிய கல்லறை எனச் சிலரால் அழைக்கப்படுகிறது.

More News

அர்ச்சனாவின் மாஸ்க்கை கழட்டிய மாஸ் பாலாஜி: காரசாரமான வாக்குவாதம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று படுவிறுவிறுப்பாக இருந்தது. ஆரியின் கோபம், ஆரியை ஒட்டுமொத்தமாக டார்கெட் செய்த போட்டியாளர்கள், அர்ச்சனாவை நாமினேட் செய்து அவருடைய குருப்பிஸத்தை

டாக்டர் பட்டம் முடித்தும் ரோட்டில் பிச்சையெடுத்த திருநங்கை… அவரது கனவை நனவாக்கிய பெண் காவல் ஆய்வாளர்!!!

மதுரையில் MBBS பட்டம் முடித்த திருநங்கை ஒருவர் தான் திருநங்கை என்பதை நிரூபிப்பதற்கான சான்றிதழை பெறமுடியாமல் தவித்து வந்து உள்ளார்.

புயல் எச்சரிக்கை கூண்டு எதற்கு ஏற்றப்படுகிறது? அந்த எண்களுக்கு அர்த்தம் என்ன???

பெரும்பாலும் புயல் காலங்களில் இந்த எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது என ஊடகங்களில் செய்தி வெளியாகும்.

அடுத்த 12 மணி நேரத்தில்... நிவர் புயலால் சென்னைக்கு ஏற்படும் பாதிப்புகள்!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக 'நிவர்' புயல் உருவானது சற்றுமுன் உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த புயலின் காரணமாக சென்னை உள்பட கடலோர பகுதிகளில் கனமழை கடந்த சில மணி நேரங்களாக பெய்து வருகிறது.

அர்ச்சனாவின் ஆதரவாளர்கள் யார் யார்? நேருக்கு நேர் போட்டுடைத்த பாலாஜி!

பிக்பாஸ் வீட்டில் குருப்பிஸம் இருப்பதை முதல்முதலில் போட்டு உடைத்தவர் சுரேஷ் தான் என்றாலும் அதன் பிறகு குருப்பிஸம் இருப்பதாக அவ்வப்போது வலியுறுத்தி வருபவர்கள்