தமிழக அரசை அனுமதிக்க முடியாது… மீண்டும் நீதிமன்றத்தை நாடிய வேதாந்தா நிறுவனம் !
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா முழுவதும் நிலவிவரும் ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தீர்க்க மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு, வேதாந்த நிறுவனம் ஒரு இடைக்கால மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தது. இந்த மனுவை நீதிபதி போப்டே அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டு அவசர கால அடிப்படையில் வேதாந்தா நிறுவனத்தை திறக்கலாமா என்கிற ரீதியில் விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையில் கலந்து கொண்ட தமிழக அரசு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் அருகில் உள்ள பல ஹெக்டேர் நிலங்கள் மாசுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து அதுதொடர்பான போராட்டமும் தமிழகத்தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதற்கான போராட்டத்தில் 13 பொதுமக்கள் உயிர்நீத்துள்ளனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தமிழகத்தில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தலாம் எனக் கருத்துக் கூறி இருந்தது.
இந்தக் கருத்தை ஒட்டி நீதிபர் போப்டே ஏன் ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்சிஜனை உற்பத்திச் செய்யக்கூடாது எனக் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வரவுள்ள நிலையில் மீண்டும் வேதாந்த நிறுவனம் ஒரு கூடுதல் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசை அனுமதிக்க முடியாது. காரணம் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு போதுமான அனுபவம் உள்ள ஆட்கள் தேவை.
குறைந்த 45 ஊழியர்களாவது 10 வருட அனுபவத்துடன் இந்த வேலையில் ஈடுபடுத்த வேண்டும். இப்படி அனுபவம் இல்லாத ஆட்களை வைத்து ஆக்சிஜனை தயாரித்தால் ஆக்சிஜனின் தரம் குறைந்து விடும். மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நடத்திய கருத்துக்கணிப்பு கூட்டத்தில் பொதுமக்கள் யாரும் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக கருத்துக் கூறவில்லை. எனவே இந்தக் கருத்துக்கணிப்பு கூட்டத்தை முழுமையாக எடுத்துக் கொள்ள முடியாது என வேதாந்த நிறுவனம் மனுவில் கூறியுள்ளது.
இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு சார்பாக ஆக்சிஜன் தயாரிப்பதற்கு வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு காட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments