சல்மான்கான் வேட்டையாடி கருப்பு மானில் அப்படி என்ன விசேஷம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
மனிதர்களை கொலை செய்த பலரே தண்டனையின்றி சுதந்திரமாக உலாவி வரும் நிலையில் மான்களை கொன்ற ஒருவருக்கு ஐந்து வருடங்கள் சிறையா? என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது. ஐந்து வருடங்கள் தண்டனை கொடுக்கும் அளவுக்கு அப்படி என்ன அந்த மான் சிறந்தது?
1.சிந்து சமவெளி பள்ளத்தாக்கு நாகரிகத்தின்போதே இந்த கருப்புவகை மான் இருந்ததாகவும், அந்த காலகட்டத்தில் இந்த மான்கள் தான் மனிதர்களின் விரும்பத்தக்க உணவுப்பொருளில் ஒன்றாகவும் இருந்துள்ளது. இந்த மான் குறித்த பல்வேறு குறிப்புகள் சிந்து சமவெளி பள்ளத்தாக்கை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சி குறிப்புகளில் உள்ளது.
2. புராணங்களின்படி பார்க்கும்போது இந்த அரிய வகை மான்கள் ரதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கிருஷ்ணர் மற்றும் சந்திரன் வாகனங்களில் இந்த மான்கள் உள்ளது.
3. ராஜஸ்தான் மாநிலத்தில் கிருஷ்ணரை வழிபடும் பக்தர்கள் கிருஷ்ணனின் வாகனத்தில் இருக்கும் இந்த மானுக்கும் அதிகளவு முக்கியத்துவக் கொடுத்து வருகின்றனர்.
4. மேலும் இந்த மான், பருவ காலங்களுக்கு ஏற்ப வண்ணம் மாறும் அதிசயத்தை கொண்டது. கருப்புநிற இந்த மான்கள் மழைக்காலத்தில் வெள்ளை புள்ளிகளுடனும், குளிர்காலத்தில் புள்ளிகள் மறைந்தும், வெயில் காலத்தில் பிரெளன் நி'றத்திலும் காணப்படும்
5. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் அமெரிக்காவின் ஒருசில பகுதிகளில் இந்த மான்கள் வாழ்கின்றன. 19 ஆம் நூற்றாண்டில் சுமார் 40-50 லட்சம் கருப்பு மான்கள் உயிர் வாழ்ந்த நிலையில் அதிகளவு உணவுக்காக வேட்டையாடப்பட்டதால் தற்போது மிக அரிதாக ஒருசில ஆயிரம் மான்கள் மட்டுமே உலகம் முழுவதும் உள்ளது.
6. மிக வேகமாக இந்த மான் அழிந்து வந்ததால் 1970ஆம் ஆண்டு இந்த மான் உணவுப்பொருளாக்குவது தடை செய்யப்பட்டது.
7. தமிழர்களாகிய நாம் பசுவை வணங்குவது போன்று ராஜஸ்தானில் உள்ள ஒருசில சமூகத்தினர் இந்த மானை தெய்வம் போல் வழிபடுவதும் உண்டு. எனவேதான் இந்த மானை கொன்ற சல்மான்கானுக்கு தண்டனை கிடைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com