பிக்பாஸ் வீட்டில் கணவரை பற்றி பிரியங்கா ஏன் பேசவில்லை: இதுதான் காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான பிரியங்கா இரண்டாம் இடம் பெற்றார் என்பதும், ராஜூவை விட அவருக்கு அதிக பிரபலம் இருந்தாலும் தாமரை, நிரூப் உள்பட ஒருசிலருடன் தேவையில்லாத மோதல் காரணமாக அவர் பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை மிஸ் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும் சரி, பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே இருக்கும் போதும் சரி, பிரியங்கா தனது கணவரை பற்றி பெரிதாக எதுவுமே பேசுவதில்லை. ரசிகர்கள் பிரியங்காவிடம் அவரது கணவர் குறித்த கேள்விகளுக்கும் அவர் மழுப்பலாகத்தான் இதுவரை பதில் கூறியுள்ளார்.
தனது கணவர் கூச்ச சுபாவம் கொண்டவர் என்றும், அடிக்கடி வெளியே வரமாட்டார் என்றும் பலமுறை பிரியங்கா கூறியுள்ளார். இதனை வைத்து பிரியங்காவுக்கும் அவரது கணவருக்கும் பிரச்சனை என ஒருசிலர் வதந்தி பரப்பிய சம்பவங்களும் உண்டு. இந்த நிலையில் ரசிகர்கள் பலர் எனது கணவர் பிரவீன் குறித்து கேட்கின்றார்கள். அவர்களுக்காகவே ஒரு வீடியோவை வெளியிடுகிறேன்’ என்று பிரியங்கா கூறியுள்ளார். அந்த வீடியோ வெளியானவுடன் பல வதந்திகள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரியங்கா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்தபோது, அந்த நிகழ்ச்சியின் பொறுப்பாளரான பிரவீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெரிய நிறுவனங்களின் விதிகளின்படி ஒரே நிகழ்ச்சியில் உறவுமுறையில் உள்ளவர்கள் பணி செய்ய முடியாது என்பதால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு பிரவீன் மாறினார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் குழுவிலும் பிரவீன் இருந்ததால் தான் நிறுவனத்தின் விதிகளின்படி போட்டியாளரான பிரியங்கா தனது கணவர் குறித்து அந்த நிகழ்ச்சியில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் கிச்சனில் இருக்கும் போது ஒருசில முறை மறைமுகமாக பிரியங்கா தனது கணவர் குறித்து கூறியதை ஒரு சிலர் கவனித்திருக்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments