சுவாரஸ்யமின்றி திணறும் பிக்பாஸ்: இனியாவது தேறுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடிய போகிறது. ஆனால் கமல் உள்பட இன்னும் ஒருவர் கூட பார்வையாளர்களின் மனதை தொட முடியவில்லை.
கடந்த பிக்பாஸ் சீசனில் சில நாட்களில் ஓவியா, பார்வையாளர்களின் ஹீரோ ஆகிவிட்டார். அதேபோல் சினேகன், ஆரவ், கணேஷ், ஆர்த்தி ஆகியோர்களையும் பார்வையாளர்கள் ஓரளவு ரசிக்க தொடங்கிவிட்டனர். ஜூலி, காயத்ரி ஆகியோர்கள் பார்வையாளர்களால் வில்லிகளாக பார்க்கப்பட்டனர். ஆனால் இந்த சீசனில் வில்லிகளாக கூட யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை.
போட்டியாளர்கள் ஒருவரிடமும் தனித்தன்மையே இல்லை என்பது மிகப்பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. போதாக்குறைக்கு பிக்பாஸ் நடுநிலையிலும் பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் ஐஸ்வர்யாவை காப்பாற்ற பிக்பாஸ் பயன்படுத்தும் தந்திரம் பார்வையாளர்களுக்கு எரிச்சலை தருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியை பரபரப்பாக்க பிக்பாஸ் பெரும் முயற்சி செய்து சண்டையை மூட்டிவிட்டாலும், அது புஸ்வானமாக போய்விடுவதால் சுவாரஸ்யத்தை அதிகரிக்க பிக்பாஸ் ஸ்க்ரிப்ட் ரைட்டர்கள் திணறி வருகின்றனர்.
போதாக்குறைக்கு கமல் வரும் நாட்களான சனி, ஞாயிறும் தற்போது களையிழந்து வருகிறது. 'எனக்கு கிடைத்த பாக்கியம்', நான் பெற்ற அதிர்ஷ்டம்' போன்ற தற்புகழ்ச்சிகள் இல்லாத எபிசோடே இல்லை என்ற அளவுக்குத்தான் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது. கமல்ஹாசன் ஒரு ஜீனியஸ் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரது தற்பெருமைகளை கேட்க யாரும் வரவில்லை என்பதை கமல்ஹாசன் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அனனவரின் கருத்தாக உள்ளது. மேலும் அவரது கட்சியையும் கொள்கையை புகுத்த இது சரியான மேடை அல்ல என்பதும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் கமல் புரிந்து கொண்டால் சரி.
இனிவரும் நாட்களிலாவது வைல்ட் கார்ட் எண்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்லாவிட்டால், பிக்பாஸ் 2 சீசனோடு பிக்பாஸ் முடிவடைய வேண்டிய நிலை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout