ஆஸ்கார் விருதுக்கு 'பாகுபலி 2' தேர்வு செய்யப்படாதது குறித்து எஸ்.எஸ்.ராஜமெளலி

  • IndiaGlitz, [Tuesday,September 26 2017]

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 90வது ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் சார்பில் 'நியூட்டன்' என்ற பாலிவுட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியாகி உலகின் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்த எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படமே ஆஸ்காருக்கு இந்தியாவில் அனுப்பப்படும் படமாக இருக்கும் ஏராளமானோர் கருதியதை அடுத்து அந்தப்படம் தேர்வு செய்யப்படாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி, 'ஆஸ்கார் விருதுக்கு 'பாகுபலி 2' தேர்வு செய்யப்படாதது குறித்து எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. நான் விருதுகளை குறிவைத்து அந்த படத்தை இயக்கவில்லை, அதுகுறித்து நான் சிந்திக்கவும் இல்லை. எனது ஒரே குறிக்கோள் இந்த படத்தின் கதையும் காட்சிகளும் ஒவ்வொரு பார்வையாளரையும் சென்றடைய வேண்டும் என்பதுதான். மேலும் வசூல் அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதும் எனது எதிர்பார்ப்பு. இந்த இரண்டும் நடந்துவிட்டது.

'பாகுபலி 2' படத்திற்கு விருதுகள் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேனே தவிர, விருதுகள் கிடைக்காததற்கு ஏமாற்றம் அடைய மாட்டேன்' என்று மேலும் அவர் கூறியுள்ளார்.ஆஸ்கார் விருதுக்கு இந்த படம் தேர்வு செய்யப்படவில்லை எனினும் நிச்சயம் பல தேசிய விருதுகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.