ஜோதிகா அப்படி என்ன தவறாக கூறினார்? பிரபல நடிகை கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நெட்டிசன்கள் ஒரு சிலர் சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஜோதிகாவுக்கு ஆதரவாக திரையுலகைச் சேர்ந்தவர்களும் சமூக வலைதள பயனாளிகளும் பலர் ஒருசில கருத்துக்களை கூறியதால் கடந்த சில நாட்களாக சமூக வலைதளம் பெரும் பரபரப்பில் இருந்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது சமூக வலைத்தளத்தில் ஜோதிகாவை விமர்சனம் செய்தவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜோதிகா மீது ஏன் இவ்வளவு வன்மையான தாக்குதலை ஒருசிலர் நடத்துகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் அவருடைய பேச்சை முழுமையாக கேட்டேன். அவர் எந்த விதத்திலும் தவறாக எதுவும் சொல்லவில்லை.
இந்த கொரோனா நேரத்திலும் ஏன் பாடங்களை கற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை., மோசமான மத அரசியலை ஒரு சிலர் செய்வது அருவருப்பாக உள்ளது. ஜோதிகா தனது பேச்சில் எந்த ஒரு மதம் குறித்தும் குறிப்பிட்டு பேசவில்லை. அவருடைய பேச்சில் உண்மையான சமூக அக்கறை மட்டுமே இருந்தது. அவருடைய பேச்சில் நான் எந்த இடத்திலும் தவறு காணவில்லை. ஒருவேளை ஒரு சிலருக்கு அவர் பேசியது மன வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால் அதனை டீசன்டாக தெரிவிக்கலாம். ஜோதிகா நிச்சயம் அவர்களது கருத்துக்கு மதிப்பு அளிப்பார் என்று நான் நம்புகிறேன்’ என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments