கொரோனா பரிசோதனை முடிவுகள் ஏன் தவறாக இருக்கின்றன???

  • IndiaGlitz, [Saturday,April 25 2020]

 

இந்தியாவில் கொரோனா பரிசோதனையில் ரேபிட் கிட், RT-PCR என இரண்டு பரிசோதனை முறைகள் பிரதானமாகப் பயன்படுத்தப் படுகின்றன. இதைத் தவிர காசநோய் பரிசோதனை கருவிகளை கொண்டு கொரோனா பரிசோதனை செய்யும் CB-NAAT முறையும் குறைவான அளவில் பயன்படுத்தப்படுகிறது. RT-PCR முறையில் நவீனமாக Pooled RT-PCR பரிசோதனையும் செய்யப்படுகிறது. இம்முறையில் ஒரே தடவையில் 5 பேருக்கு கொரோனா பரிசோதனையை செய்யமுடியும். ஆனால் முடிவுகள் தனித்தனியாக இல்லாமல் 5 பேருக்கும் சேர்த்து ஒரே முடிவு கிடைப்பதால் இதில் அதிகப்படியான சிக்கலும் இருக்கிறது.

தற்போது இந்தியாவில் ரேபிட் கிட் பரிசோதனை முறைதான் பெரும்பாலான கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு ஆரம்பக் கட்டத்தில் செய்யப்படுகின்றன. இந்த பரிசோதனையின் முடிவுகள் தவறாக இருப்பதாகச் சமீபத்தில் இந்திய மருத்துவக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் 2 நாட்களுக்கு ரேபிட் கிட் பரிசோதனைக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரேபிட் கிட் மட்டுமல்ல, சில நேரங்களில் RT-PCR முறையிலும் தவறான முடிவுகள் கிடைக்கின்றன.

RT-PCR பரிசோதனை- முதலில் கொரோனா அறிகுறி இருப்பவர்களின் தொண்டை சளி, மூக்கின் சளி போன்றவற்றின் மாதிரிகள் ஒரு பஞ்சு சுற்றப்பட்ட குச்சிகளால் சேகரிக்கப்படுகிறது. சில நேரங்களில் Broncho Scope கருவிகளைக் கொண்டு நுரையீரலில் உள்ள சளி மாதிரிகளும் சேகரிக்கப்படுகின்றன. இப்படி சேகரிக்கப்படும் மாதிரிகளில் கொரோனா மரபணு இருக்கிறதா என்பதை RT-PCR கருவிகளைக் கொண்டு பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பரிசோதனைக்கு அதிகபடியான நேரமும், பணமும் தேவைப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த முறையிலுள்ள பெரிய சிக்கல், எடுக்கப்படும் சளி மாதிரிகள் முழுமையான கொரோனா வைரஸ் அளவை கொண்டிருப்பதில்லை. இந்தியாவில் 80 விழுக்காட்டு மக்களுக்கு கொரோனா அறிகுறிகளே இல்லாமல் கொரோனா வைரஸ் பாதிக்கிறது. அறிகுறிகள் இல்லாத அதாவது சளி, இருமல் போன்ற பாதிப்புகள் வெளிப்படையாகத் தெரியாமல் கொரோனா நோய்த்தொற்று ஒருவரை பாதித்து இருந்தால் சோதனை முடிவும் தவறாகத்தான் கிடைக்கும். இதைத் தவிர்க்க, மாதிரிகளை சேகரிக்க தேர்ந்த ஒரு பணியாளரை வைத்திருக்க வேண்டும். பரிசோதனை செய்யும் ஊழியருக்கு முறையான பயிற்சி இல்லாமல் அவர் மாதிரிகளை சேகரிக்கும்போது அலட்சியமாக இருந்தாலும் கொரோனா முடிவுகள் தவறாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதிலும் ரேபிட் கிட் எனப்படும் பரிசோதனையானது கொரோனா பதித்த நபர்களின் ஆன்டி பாடிகளை வைத்தே நடத்தப்படுகின்றன. அதாவது கொரோனா நோய்த்தொற்று ஒருவரின் உடலில் பாதிப்பை ஏற்படுத்தி அந்த பாதிப்புக்கு எதிராக அவரது நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் எதிர்ப்பு சுரப்பிகளை சுரந்து இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனையில் சரியான முடிவினை பெற முடியும். ஒருவேளை கொரோனா வைரஸ் ஒருவரின் உடலை பாதித்து அவருக்கு சளி, இருமல், நுரையீரல் பாதிப்பு போன்ற பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் கொரோனா பரிசோதனையின் முடிவில் தவறு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தவறான மாதிரிகள், கொரோனா வைரஸ் அறிகுறிகளை வெளிப்படுத்தாதது போன்ற காரணங்களால் பரிசோதனையில் முடிவுகள் தவறாகின்றன. இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் 30 விழுக்காடு கொரோனா பரிசோதனைகளில் முடிவுகள் தவறாகத்தான் இருக்கிறது என செய்திகள் வெளியாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் என்பது புதிதாக உருவாகியிருக்கும் ஒரு வைரஸ் நோய்த்தொற்று. எனவே அதை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் கருவிகளும் புதிதுதான். அனைத்தும் சோதனை நிலைகளிலே இருக்கிறது. எனவே பரிசோதனை கருவிகளிலும் தவறு இருப்பதற்கான வாய்ப்புண்டு. இதைச் சரிப்படுத்த சற்று காலம் எடுக்கும். அதுமட்டுமில்லாமல் எந்தவொரு கொரோனா பரிசோதனை கருவியும் முழுவதான முடிவினைத் தரும் என மருத்துவ நிறுவனங்களும் உறுயளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுதவிர சோதனை முடிவுகள் தவறாவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்த கொரோனா வைரஸ் கிருமிகள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருக்கும் டி4 என்ற செல்லை முற்றிலுமாக அழித்துவிடுகிறது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதாவது டி4 என்பது ரத்ததில் இருக்கும் எதிர் அணுக்களாகும். இதை கொரோனா வைரஸ் அழித்துவிடுவதால் நமது செல்களில் கொரோனா வைரஸ் இருப்பது வெளிப்படையாகத் தெரியாது. எனவே சோதனை முடிவுகளிலும் தவறு நடக்கிறது என ஆய்வுகள் வெளியாகியிருக்கின்றன. எச்.ஐ. வி வைரஸ் கிருமிகளுக்கு நடத்தப்படும் சோதனைகளிலும் இத்தகைய சிக்கல் இருக்கின்றன. கொரோனா வைரஸ் டி4 செல்களை அழித்துவிடுவதால் அதன் பாதுகாப்பாக மறைந்து கொள்கிறது என மருத்துவர்கள் இதைப்பற்றி குறிப்பிடுகின்றன.

கொரோனா பாதித்த ஒரு நபரின் உடலில் ஆரம்பக்கட்டத்தில் அவரது நோய் எதிர்ப்பு மண்டலம் மிகவும் வேகமாகச் செயல்பட்டு கொண்டிருக்கும். அப்படி நோய் எதிர்ப்பு மண்டலம் வேகமாகச் செயல்படும்போது சிலரது உடலில் கொரோனா கிருமிகள் அமைதியாக இருந்து விடுகிறது. தனது இருப்பை வெளிப்படுத்தாமல் ஒழிந்துகொள்கிறது. அந்த நபரின் நோய் எதிர்ப்பு ஆற்றல் முற்றிலுமாக குறைந்து நோயின் தீவிரத்தன்மைக்குத் தள்ளப்படும்போது கொரோனா வைரஸ்கள் தனது பாதிப்பையே வெளிப்படுத்துகின்றன. இப்படியும் கொரோனா விளையாட்டுக்காட்டுகிறது எனத் தற்போது மருத்துவ உலகம் கவலைத் தெரிவித்து வருகிறது.

More News

முழு ஊரடங்கு உத்தரவு நாட்களில் என்னென்ன இயங்கும்? சென்னை மாநகராட்சி விளக்கம்

நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு

இன்று மட்டும் 66 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்: சென்னைக்கு அதிக பாதிப்பு!

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 பேர்கள் என்றும் இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளதாகவும்

சமூக விலகல் ஒரே நாளில் கேள்விக்குறியாகிவிட்டது: பிரபல இயக்குனர் வருத்தம்

சென்னை உள்பட 5 நகரங்களில் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்ததும், இன்று காலை முதல் பொதுமக்கள் சமூக விலகலை கேள்விக்குறியாக்கி கடைகளில் குவிந்தனர்.

ஜோதிகா படத்தை அடுத்து ஆன்லைன் வெளியாகிறதா ராகவா லாரன்ஸ் படம்?

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையரங்குகள் இப்போதைக்கு திறக்கப்பட மாட்டாது என்று தெரிகிறது

கொரோனா நிதிக்காக கிரிக்கெட் போட்டி: யோசனை கூறிய அக்தருக்கு பதிலடி கொடுத்த கபில்தேவ்

கொரோவை தடுக்க நிதி திரட்ட வேண்டும் என்றும், அதற்கு இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் யோசனை கூறியுள்ளார்.