புரமோஷன் விழாவுக்கு வர மறுத்த அனுபமா பரமேஸ்வரன்.. ஹீரோ சொன்ன அதிர்ச்சி காரணம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை அனுபமா பரமேஸ்வரன் நாளை வெளியாக இருக்கும் படத்தின் புரமோஷன் விழாவுக்கு வர முடியாது என்று கூறிய நிலையில் அவர் ஏன் வரவில்லை என்பதற்கான காரணத்தை அந்த படத்தின் நாயகன் கூறியுள்ள நிலையில் அந்த தகவல் பெறும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் சித்து மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகிய திரைப்படம் ’டில்லூ ஸ்கொயர்’. இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அனுபமா பரமேஸ்வரன் கலந்து கொள்ளாத நிலையில் அவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதை படத்தின் நாயகன் சித்து நேற்று மேடையில் தெரிவித்தார்.
இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் அனுபமாவின் கை வைத்திருக்கும் இடம் குறித்து ரசிகர்கள் கிண்டல் அடித்ததாகவும், நடிகைகள் குறித்த கமெண்ட்களை ரசிகர்கள் கவனமாக செய்ய வேண்டும் என்றும் இது சென்சிடிவ் ஆன விஷயம் என்றும் சித்து தெரிவித்தார்.
யாரும் எல்லையை கடக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுகிறேன் என்றும் இதுபோன்ற இதுபோன்ற விஷயங்களில் ஆரோக்கியமான சூழ்நிலையை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நேற்று வெளியான அந்த போஸ்டரில் அனுபமா பரமேஸ்வரனின் கை, நாயகன் சித்துவின் இடுப்புக்கு கீழே இருந்ததை தான் ரசிகர்கள் ஆபாசமாக கிண்டல் செய்து வந்த நிலையில் இதன் காரணமாக அனுபமா நேற்றைய புரமோஷன் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.
Such an awesome gesture 👏👏
— Sai Satish (@PROSaiSatish) March 28, 2024
Star Boy #SiddhuJonnalagadda gives a wonderful message at #TilluSquare Pre Release Event ✨#Siddhu #AnupamaParameswaran #Anupama #TilluSquarefromTomorrow pic.twitter.com/gOmABQkfnx
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments