'பாகுபலி'யில் நடிக்காதது ஏன்? முதமுதலாக மனம் திறந்த ஸ்ரீதேவி

  • IndiaGlitz, [Wednesday,June 28 2017]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் மிகப்பெரிய வெற்றி படங்களான 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களில் முக்கிய கேரக்டரான ராஜமாதா சிவகாமி கேரக்டரில் முதலில் ஸ்ரீதேவி நடிக்கவிருந்ததாகவும், அவர் அதிக சம்பளம் கேட்டதால் ரம்யா கிருஷ்ணனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததாகவும் ஏற்கனவே பலமுறை செய்திகள் வெளிவந்தன.

இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை அமைதியாக இருந்த ஸ்ரீதேவி சமீபத்தில் அளித்த பேட்டி மூலம் முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளார். 'பாகுபலி' படத்தின் ராஜமாதா சிவகாமி கேரக்டரில் நடிக்க நான் ரூ.6 கோடி சம்பளம் கேட்டதாகவும், மேலும் பல சலுகைகள் கேட்டதாகவும் இயக்குனர் ராஜமெளலி பேட்டி ஒன்றில் கூறியது என் மனதை புண்படுத்தியுள்ளது.

50 வருடங்களில் 300 படங்களில் நடித்துள்ளேன். நான் எத்தனையோ படங்களில் நடிக்க மறுத்ததுண்டு. ஆனால் 'பாகுபலி' படத்தில் நடிக்க மறுத்ததை மட்டும் ஊடகங்கள் பெரிதாக்குகின்றன. என் கணவர் ஒரு தயாரிப்பாளர் என்பதால் ஒரு தயாரிப்பாளருக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பது எனக்கு தெரியும். எனவே ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி நான் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. அவ்வாறு நிபந்தனைகள் விதித்திருந்தால் என்னை எப்போதோ திரையுலகில் இருந்து வெளியேற்றி இருப்பார்கள்.

ராஜமெளலி ஒரு மதிக்கத்தக்க இயக்குனர். அவர் இயக்கிய 'நான் ஈ' படம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒருவேளை அவரிடம் தயாரிப்பாளர் தரப்பு தவறான தகவலை கூறியிருக்கலாம் அல்லது தகவல் பரிமாற்றத்தில் தவறு நடந்திருக்கலாம். ஆனால் இதைப்பற்றி பொதுவெளியில் பேசியதை இயக்குனர் ராஜமெளலி தவிர்த்திருக்கலாம் என்பதே எனது வருத்தம் என்று கூறியுள்ளார்.

More News

பிக்பாஸில் புகுந்த அரசியல்: ஜூலியை ரவுண்டு கட்டிய ஆர்த்தி-காயத்ரி

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக இருந்தாலும் தற்போது அனைவரும் எதிர்பார்த்த மாதிரி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது...

கமல்ஹாசனின் பிக்பாஸ்: ஜூலியை வெளியேற்றினால் என்ன நடக்கும்?

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் நாள் சுமாராக போனாலும் நேற்றைய இரண்டாவது நாளில் கொஞ்சம் சூடுபிடித்தது. இதில் கலந்து கொண்ட 15 பேர்களில் பாடலாசிரியர் சினேகன் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பிக்பாஸ்: ஜல்லிக்கட்டு ஜூலியின் பேச்சால் விளைந்த விபரீதம்

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் இளம்பெண் ஜூலி.

ஜூலி எண்ட்ரியால் கலகலப்பான பிக்பாஸ்

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் இளம்பெண் ஜூலி.

ஆட்டோ டிரைவரை பாடகராக்கிய டி.இமான்

ஒரு காலத்தில் இசைத்துறையிலும், திரையிசை துறையிலும் நுழைய வேண்டுமானால் சிறுவயதில் இருந்தே இசைஞானம் பெற்றவர்கள் மட்டுமே வரமுடியும் என்ற நிலை இருந்தது