பத்மவிபூஷன் விருது பெற்ற ரஜினியை ஏன் வாழ்த்தவில்லை : அக்சயகுமார்
- IndiaGlitz, [Wednesday,January 27 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று முன்தினம் இந்திய அரசின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாகிய பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்ட செய்தி வெளியானதும் இந்திய, தமிழக அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், ரஜினியின் நெருங்கிய நட்பு வட்டாரங்கள் என அனைவரும் அவருக்கு தொடர்ந்து தொலைபேசியிலும், சமூக வலைத்தளங்கள் மூலமும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகரும், '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வரும் அக்சயகுமார் இன்னும் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் அதற்கான காரணத்தையும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பத்ம விபூஷன் விருது கிடைத்ததில் சந்தோஷமாக இருக்கிறது. அவரை வாழ்த்துவதற்கு என்னிடம் ரஜினி சாருடைய தொலைபேசி எண் இல்லை. அவரிடம் தொலைபேசி கேட்டு வாங்கும் தைரியமும் எனக்கு இல்லை” என்று கூறியுள்ளார். இதன்மூலம் அவர் ரஜினி மீது எவ்வளவு பெரிய மரியாதை வைத்துள்ளார் என்பது புரிய வருகிறது.
இந்நிலையில் வரும் மார்ச் மாதம் முதல் 2.0' படத்தில் ரஜினிகாந்த்-அக்சயகுமார் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 'லைகா புரடொக்ஷன்ஸ்' நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் இந்த படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார்.