அஜித் அவசர அவசரமாக சென்னை திரும்பியது இதற்காகத்தானா? வேகமாக பரவும் வதந்தி..!

  • IndiaGlitz, [Wednesday,July 03 2024]

நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக அஜர்பைஜான் நாட்டில் ’விடாமுயற்’சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் நேற்று திடீரென சென்னை திரும்பினார் என்றும் அவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னை திரும்பினார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சர்ஜரி செய்யப்பட்டதாகவும் அதற்காகத்தான் அஜீத் அவசரமாக சென்னை திரும்பியுள்ளதாகவும் ஒரு செய்தி மிக வேகமாக பரவி வருகிறது.

அஜித் அஜர்பைஜான் செல்வதற்கு முன்பே ஷாலினிக்கு சர்ஜரி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அவரிடம் கூறியதாகவும் இதன் பின்னர் சர்ஜரிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு தான் அஜித் அஜர்பைஜான் சென்றதாகவும் அவ்வப்போது மருத்துவரிடம் தொடர்பு கொண்டு சர்ஜரி குறித்த விளக்கத்தை அஜித் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஷாலினிக்கு தற்போது சர்ஜரி வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து தன்னுடைய மனைவியை பார்ப்பதற்காக அஜித் சென்னை திரும்பி உள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் மீண்டும் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது

இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பது தெரியவில்லை. அஜித் தரப்போ அல்லது அவரது மேனேஜர் தரப்போ இந்த தகவலை உறுதி செய்யவில்லை. இருப்பினும் இந்த தகவல் வதந்தி போல் மிக வேகமாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

இன்று நடிகை வரலட்சுமி திருமணம்.. வரவேற்பு எப்போது? சரத்குமார் வெளியிட்ட அறிவிப்பு..!

நடிகை வரலட்சுமி திருமணம் இன்று நடைபெறும் நிலையில் அவரது வரவேற்பு நிகழ்ச்சி எப்போது என்பது குறித்து அறிவிப்பை சரத்குமார் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

63 வயது நடிகருக்கு மனைவியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. புதிய போஸ்டர் ரிலீஸ்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவி கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித்துக்கு போட்டியாக பெட்டியை தள்ளி கொண்டு செல்லும் ராஷ்மிகா மந்தனா.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

அஜித் நடித்த 'விடாமுயற்சி' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த போஸ்டரில் அஜித் கையில் ஒரு பேக் வைத்துக் கொண்டு சாலையில் நடந்து செல்வது

சம்பளமே வேண்டாம்.. தினமும் 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் பிரபல நடிகர் அறிவிப்பு..!

தினமும் இரண்டு கோடி சம்பளம் வாங்கும் நடிகர் ஒருவர் தனக்கு சம்பளமே வேண்டாம் என திடீரென அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் சேதுபதி - பாண்டிராஜ் படத்தின் நாயகி இந்த பிரபலமா? அப்ப சம்பவம் இருக்கு..!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நாயகி குறித்த