அப்பா பாஜகவில் இணைந்ததால் நடிகையை நீக்கியதா 'அந்தாதூன்' ரீமேக் படக்குழு?
- IndiaGlitz, [Thursday,March 11 2021]
நடிகையின் தந்தை பாஜகவில் இணைந்ததால் ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக்கில் இருந்து அந்த நடிகை நீக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பாலிவுட்டில் சூப்பர் ஹிட் படம் திரைப்படமான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக் ’அந்தகன்’ என்ற பெயரில் தயாராகிறது என்பதும் இந்த படத்தில் பிரசாந்த், சிம்ரன் நடிக்க தியாகராஜன் இயக்குகிறார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தமிழைப் போலவே ‘அந்தாதூன்’ படம் மலையாளத்திலும் ரீமேக் செய்யப்படுகிறது. ‘பிரம்மம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரித்திவிராஜ் மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க மலையாள நடிகையான அஹானா கிருஷ்ணா என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்
இந்த நிலையில் திடீரென ‘பிரம்மம்’ படத்திலிருந்து அஹானா நீக்கப்பட்டார். சமீபத்தில் அஹானாவின் தந்தை கிருஷ்ணகுமார் பாஜகவில் இணைந்ததால் தான் அவர் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டதாக சமூகவலைதளத்தில் வதந்திகள் பரவியது.
இதுகுறித்து விளக்கம் அளித்த படக்குழு, அஹானாவை நாங்கள் ஒப்பந்தம் செய்து போட்டோ ஷூட் நடத்தியது உண்மைதான். ஆனால் போட்டோஷூட்டிற்கு பின் அஹான அந்த கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்பது தெரிந்ததால் அவரிடம் விளக்கம் அளித்துவிட்டு தான் படத்திலிருந்து நீக்கினோம். இதில் எந்த அரசியல் காரணமும் இல்லை என்று தெரித்துள்ளனர்.
தந்தை பாஜகவில் இணைந்ததால் நடிகையை படக்குழு நீக்கியதாக பரவிவரும் வதந்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.