கணவர் பெயரை அதிரடியாக நீக்கிய அபினய் மனைவி: என்ன காரணம்?

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அபினய்யின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவரின் பெயரை அதிரடியாக நீக்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது என்பதும் அதன் பின் இரண்டு வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் இணைந்து கொண்டார்கள் என்பதும் தெரிந்ததே. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அபினய் எலிமினேட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வுகளில் ஒன்று குறித்த அபினய் மற்றும் பாவனி கெமிஸ்ட்ரி என்பதும், ஒரு டாஸ்க்கின்போது அபினய்யிடம் ராஜூ நேரடியாக பாவனியை நீங்கள் காதலிக்கிறீர்களா? என்று கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விஷயத்தில் அபினய், பாவனி ஆகிய இருவரும் தங்களது நிலையை மனம் திறந்து குறிப்பிடவில்லை எனவும், அதனால் பல குழப்பங்களுக்கு காரணமாக அமைந்தது என கமல்ஹாசனே இருவருக்கும் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அபினய் குறித்து தனக்கு நன்றாக தெரியும் என்றும் அவரை நான் நன்றாக புரிந்து வைத்துள்ளேன் என்றும் அபினய் மனைவி அபர்ணா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். அதேபோல் எலிமினேஷனுக்கு பிறகு எனக்கு குடும்பம் தான் எல்லாவற்றையும் விட முக்கியம் என்றும் அபினய் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென அபினய் மனைவி அபர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை அபர்ணா அபினய் என குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது திடீரென அபினய் பெயரை நீக்கிவிட்டு அபர்ணா வரதராஜன் என்று குறிப்பிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபினய் அல்லது அபர்ணா விளக்கம் அளிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.