பள்ளிகளே திறக்காதபோது, திரையரங்கில் 100% அனுமதியா? சென்னை ஐகோர்ட் கேள்வி
- IndiaGlitz, [Friday,January 08 2021]
தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்த திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி என்ற அரசாணை குறித்த வழக்கு இன்று காலை மதுரை ஐகோர்ட் கிளையில் நடைபெற்ற போது 11ஆம் தேதி வரை 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்க வேண்டும் என்றும் 11-ஆம் தேதிக்கு பிறகு புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தது
இந்த நிலையில் இதேபோன்ற ஒரு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றபோது, ‘தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்க முடியாது என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது
பள்ளிகளே இன்னும் திறக்கப்படாத நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பது அவசியமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேலும் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிப்பது நல்லதல்ல என்றும், திரையரங்கு விஷயத்தில் குழந்தைகள் போல மெதுவாக அடியெடுத்து வைக்க வேண்டும் என்றும் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது