கோடிக்கணக்கில் Bodyguard-க்கு சம்பளம் கொடுக்கும் சினிமா பிரபலங்கள்… யாரென்று தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சினிமா என்றாலே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சினிமா நடிகர்களை நேரில் பார்க்கும் பொதுமக்கள் சில நேரங்களில் தங்களது இயல்பை மீறி பெரிய ஆராவாரத்தை செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். இதைத் தவிர்ப்பதற்காகவும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் சினிமா பிரபலங்கள் கோடிக்கணக்கில் சம்பளத்தை கொடுத்து சொந்தமாக மெய்க்காப்பாளர்களை நியமித்துள்ளனர். அவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு.
நடிகர் ஷாருக்கான்- பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக மதிக்கப்படும் நடிகர் ஷாருக்கானுக்கு ரவி சிங் என்பவர் மெய்க்காப்பளாராக பணியாற்றி வருகிறார். பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவருக்கு மாதம் ரூ.17 லட்சம் சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் அதே நேரத்தில் ஆண்டுக்கு ரூ 2.7 கோடி ரூபாயை அவர் சம்பளமாகப் பெற்றுக் கொள்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்திய சினிமா துறையில் அதிகம் சம்பளம் வாங்கும் பார்டிகார்டாக ரவி சிங்கே திகழ்கிறார்.
அக்ஷய் குமார் – பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகராக இருந்துவரும் அக்ஷய் குமார் தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஷ்ரேசே தேலே என்பவரை நியமித்துள்ளார். இவர் 24 மணி நேரமும் நடிகருக்கு பாதுகாப்பை வழங்குவதோடு பொது நிகழ்ச்சி, திரைப்பட நிகழ்ச்சிகள் என அனைத்து இடங்களுக்கும் கூடவே வருகிறார். மேலும் அக்ஷய் குமாரின் மகன் ஆரவ்விற்கும் பாதுகாப்பை வழங்குகிறார். அந்த வகையில் ஷ்ரேசே தேலேவிற்கு ஆண்டிற்கு ரூ. 1.2 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது.
நடிகர் சல்மான் கான் – பாலிவுட்டில் நட்சத்திர நடிகராக வலம்வரும் நடிகர் சல்மான் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த ஷேரா என்பவரை மெய்க்காப்பாளராக வைத்துள்ளார். கடந்த 29 வருடங்களாக தன்னிடம் பணியாற்றிவரும் ஷேராவிற்கு நடிகர் சல்மான் கான் மாதம் ரூ.15 லட்சத்தை சம்பளமாகக் கொடுத்து வரும் நிலையில் அவருடைய ஆண்டு சம்பளம் ரூ.2 கோடியைத் தாண்டும் எனவும் கூறப்படுகிறது.
நடிகர் அமிதாப் பச்சன்- பாலிவுட்டில் பழம்பெரும் நடிகராக இருந்துவரும் நடிகர் அமிதாப் நீண்ட காலமாக ஜிதேந்திர ஷிண்டே என்பவரை பாதுகாவலராக நியமித்து இருந்தார். மும்பை போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்த ஜிதேந்திர ஷிண்டே கடந்த 2021 வரை 1.5 கோடி ஆண்டு சம்பளமாக பெற்றுவந்தார் எனக் கூறப்படுகிறது. ஆனால் கடந்த 2022 இல் சேவை விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போதைய பாதுகாவலரைப் பற்றிய தகவல் எதுவும் அறிய முடியவில்லை.
நடிகர் அமீர்கான் – பாலிவுட் சினிமாவில் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற நடிகராக இருந்துவரும் நடிகர் அமீர்கான் தன்னுடைய பாதுகாப்பிற்காக யுவராஜ் கோர்படே என்பவரை பாதுகாவலராக நியமித்துள்ளார். மிகவும் நம்பகமான நபராக இருந்து வரும் நிலையில் அவருக்கு ரூ.2 கோடி ஆண்டு வருமானம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தீபிகா படுகோன் – பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை தீபிகா படுகோன் வெளியே செல்லும்போதெல்லாம் அவருக்கு பாதுகாப்பாக கூடவே இருந்து வருபவர் ஜலால். இவர் பல ஆண்டுகளாக நடிகை தீபிகாவிற்கு பாதுகாப்பு அளித்து வரும் நிலையில் ஆண்டு வருமானமாக ரூ. 1.2 கோடி வாங்குவதாகக் கூறப்படுகிறது.
நடிகை அனுஷ்கா சர்மா – பாலிவுட்டில் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவந்த நடிகை அனுஷ்கா சர்மா சமீபகாலமாக சினிமாவில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் பெரிய தொழில் முனைவராகவும் சினிமா தயாரிப்பாளராகவும் இருப்பதால் அவருடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவற்காக சோனு எனப்படும் பிரகாஷ் சிங் என்பவரை மெய்க்காப்பாளராக நியமித்துள்ளார்.
மேலும் இவரைத்தவிர கணவர் விராட் கோலி, மகள் வாமிகா என்று மூவருக்குமே இவர்தான் பாதுகாவலராக இருக்கிறார். அந்த வகையில் சோனுவிற்கு ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com