ஜெ. பிறந்த நாளில் சசிகலா கடிதமே எழுதவில்லையா? அப்படியானால் எழுதியது யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன் தினம் சிறையில் இருந்து சசிகலா, அதிமுக தொண்டர்களுக்காக ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு எழுதியதாக ஒரு கடிதம் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தது. ஆனால் தற்போது ஜெயலலிதாவின் பிறந்த நாள் தொடர்பாக சசிகலா சிறையில் இருந்து கடிதம் எதுவும் அனுப்பவில்லை என பெங்களூரு சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அப்படியானால் அந்த கடிதத்தை எழுதியவர் யார்? என்ற கேள்வி அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
இது குறித்து பரப்பன அக்ரஹாரா சிறையின் முதன்மை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் அவர்கள் கூறியபோது, 'இரு தினங்களாக சசிகலாவை யாரும் சந்திக்கவில்லை. அவரும் சிறையில் இருந்து நேற்று யாருக்கும் கடிதம் எழுதவில்லை. ஒருவேளை முன்கூட்டியே எழுதி தரப்பட்ட கடிதமாக இருக்கலாம். சசிகலா அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் சிறைத்துறை மூலமாகவே கடிதங்கள் எழுதலாம். அதற்கு எந்த தடையும் இல்லை” என்று கூறினார்.
இதுகுறித்து கர்நாடக அதிமுகவினர் தரப்பின் கூறியபோது, 'கடந்த திங்கள் அன்று சசிகலாவை அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சந்தித்து பேசியபோது சசிகலா இந்த கடிதத்தைக் கொடுத்திருக்கலாம், அல்லது கட்சித் தலைமையே இந்தக் கடிதத்தை எழுதி இருக்கலாம்” என்று கூறினர்.
சசிகலா கடிதம் எழுதவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அந்த கடிதத்தை உண்மையில் எழுதியது யார்? என்ற விபரத்தை ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கும் கூற வேண்டிய நிலை அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments