நெருக்கடியை ஏற்படுத்த இருக்கும் WHO வின் உலக மாநாடு!!! என்ன நடக்கும்???
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் கடும் நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நோய் பாதிப்பை அளவைவிட அதிகமாக, உலக நாடுகளிடையே முரண்பட்ட கருத்துகளையும் இந்த கொரோனா விதைத்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலில் உள்நோக்கம் இருப்பதாக சீனா மீது தற்போது பல உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
உலகமே நெருக்கடி நிலைமையில், இன்னும் 10 நாட்களில் WHO வின் உலக மாநாடு நடக்கவிருக்கிறது. இந்த மாநாடு சீனாவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனப் பல அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். காரணம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் “சீனா உற்பத்தி செய்ததுதான் கொரோனா வைரஸ், அது ஆய்வகத்தில் இருந்து வெளிப்பட்டது என்பதற்கான ஆதாரம் தன்னிடம் இருக்கிறது” என வெளிப்படையாக அறிக்கை விட்டார். அதிபரின் கருத்திற்கு வலுசேர்க்கும் விதத்தில் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியா பல முறை செய்தியாளர்களிடம் இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வந்தார். மேலும், அந்நாட்டின் ஃபாக்ஸ் நியூஸ் இதுபற்றிய விவகாரங்களை செய்தியாகவும் வெளியிட்டது.
இதைத்தவிர ஆஸ்திரேலிய பிரதமர் கொரோனா வைரஸ் பரவல் பற்றி வெளிப்படையான விசாரணைத் தேவை. நடைபெற இருக்கும் உலகச் சுகாதார மாநாட்டில் இதுகுறித்த விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதற்கு ஆதரவான கோரிக்கையை பல நாடுகள் முன்வைக்கும் எனவும் தெரிவித்து இருந்தார். மேலும், பிரிட்டன் பொதுச் சுகாதாரத் துறை அமைச்சர் பென் வாலஸ், சுவீடன் சுகாதாரத் துறை அமைச்சர் லீனா ஹாலன்கிரன் போன்றோர் சீனாவிக்கு எதிராக வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தனர்.
மேலும், அமெரிக்க அதிபர் சீனாவிற்கு ஆதரவாக உலகச் சுகாதார அமைப்பு செயல்படுகிறது என்றும், கொரோனா வைரஸ் பரவல் குறித்த செய்திகளை தாமதமாக உலக நாடுகளுக்கு அனுப்பியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அந்த அமைப்புக்கு வழங்கி வந்த நன்கொடையையும் அதிபர் ட்ரம்ப் ரத்து செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டிவரும் நிலையில் உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்ததோடு, ட்ரம்ப் கூறிய ஆதாரங்கள் எதுவும் WHO க்கு கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது, கொரோனா வைரஸ் பரவல் பற்றிய கேள்விகளை எழுப்பி சீனாவிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல உலக நாடுகள் அறிக்கைகளை தயாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் சீனாவிற்கு ஆதரவாக வடகொரியா களத்தில் இறங்கும் என்பது போன்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பின்பு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொதுவெளிக்கு வந்த உடனே சீன அதிபரைத் தொடர்பு கொண்ட பேசியதாக செய்திகள் வெளியானது. இதை வைத்து சீனாவிற்கு ஆதரவாக வடகொரியா களத்தில் இறங்கும் எனவும் கருத்து கூறப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு உலகச் சுகாதார அமைப்பு நிர்வாகக் குழுவின் முக்கிய பொறுப்புக்கு இந்திய அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்ற எதிர்ப்பார்ப்பும் கிளம்பியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout