கணம் கோட்டாரே உங்களுக்குமா? கொரோனா காலர் டியூனை சரமாரியாக வறுத்தெடுத்த நீதிபதிகள்!

கொரோனா பரவல் ஆரம்பத்ததில் இருந்தே விதவிதமான விழிப்புணர்வு விளம்பரங்கள் காலர் டியூனாக செல்போன்களில் ஒலித்து வருகிறது. ஆரம்பத்தில் இதை எரிச்சலாக நினைத்த பலரும் தற்போது அதற்கு பழகிப்போய் விட்டோம். ஆனால் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வரும் காலர் டியூன் விளம்பரம் குறித்து உயர் நீதிமன்றமே கொதித்துபோன விவகாரம் நடந்து இருக்கிறது.

கொரோனா தடுப்பூசி மற்றும் தடுப்பூசி விழிப்புணர்வு குறித்து மத்திய அரசும், டெல்லி அரசாங்கமும் எவ்வாறு தயாராகி வருகிறது என்பது தொடர்பான ஒரு வழக்கு தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விபின் சிங், ரேகா பிள்ளை இருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு செல்போனில் வரும் காலர் டியூன் குறித்து பேசும்போது மத்திய அரசை கடுமையாக விமர்சித்து உள்ளனர்.

அதாவது “மத்திய அரசிடம் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாதபோது மக்கள் எப்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும்? உங்களிடம் போதுமான தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துக் கொண்டு இந்த விளம்பரத்தை ஒலிப் பரப்புங்கள். செல்போனில் கால் செய்தாலே இந்த காலர் டியூன் வந்து எரிச்சலூட்டுகிறது. தடுப்பூசி கையிருப்பில் இல்லாதபோது இந்த காலர் டியூனால் என்ன பயன்? ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி வழங்கிட வேண்டும், பணம் கொடுத்து வாங்க மக்கள் தயாராக இருந்தாலும் அவர்களுக்கு வழங்க இருப்பு இருக்க வேண்டும்.

எனவே இந்த காலர் டியூனை எடுத்து விட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் காலச் சூழலுக்கு ஏற்ப வித்தியாசமான விளம்பரங்களை ஒலிப்பரப்புங்கள். கடந்த ஆண்டை போல கொரோனா நோய்த்தொற்றில் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பது போன்ற விளம்பரங்களைச் செய்யுங்கள். மேலும் நடிகர் அக்சய் குமாரை வைத்து கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்களை டிவி, வானொலியில் ஒளிப்பரப்புங்கள். அதோடு ஆக்சிஜன் சிலிண்டர் எங்கு கிடைக்கும்? அதை எங்கு நிரப்பலாம் என்பது போன்ற காலத்திற்கு ஏற்றாற்போன்ற விளம்பரங்களை செய்வதால் மக்களுக்கு நன்மை கிடைக்கும்’‘ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் வரும் மே 18 ஆம் தேதிக்குள் செல்போன் காலர் டியூன், தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றில் கொரோனா விளம்பரங்கள் செய்வது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து நமது நெட்டிசன்கள் “கணம் கோட்டாரே எங்களுக்கு மட்டும்தான் இப்படி எரிச்சலாகிறது என நினைத்து இருந்தோம்? உங்களுக்குமா“ என சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

மனுஷனா மாறுங்கடா... நடிகையின் சாட்டையடி பதிலுக்கு குவியும் நெட்டிசன்களின் வாழ்த்துக்கள்!

'பொதுநலன் கருதி' உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல மலையாள திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவர் நெட்டிசன் ஒருவரின் மதமாற்ற கேள்விக்கு அளித்த சாட்டையடி பதில் இன்டர்நெட்டில் வைரல் ஆகி வருகிறது

தனியா இருந்தாலும் அதுக்குன்னு இப்படியா? நெட்டிசன்களை அலறவிடும் பிக்பாஸ் நடிகை புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன் மூலம் பிரபலமானவர்களுள் ஒருவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

கொரோனா நிவாரண நிதியாக கவியரசு வைரமுத்து கொடுத்த தொகை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவி செய்யும் வகையில் பொதுமக்கள் தொழிலதிபர்கள் தாராளமாக நிதி வழங்க

சித்தார்த் என்ன நடிகர்களின் பிரதிநிதியா? கஸ்தூரி ஆவேசம்

சமீபத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய்நாத் குறித்து நடிகர் சித்தார்த் கடுமையான வார்த்தைகளை கொண்டு தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா சிகிச்சை வார்டிலும் பாலியல் வன்கொடுமை? பெண் உயிரிழந்த பரிதாபம்!

இந்தியாவில் கொரோனாவினால் தினம்தோறும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.