பிக்பாஸ்: ரூ.5 லட்சம் பணத்துடன் வெளியேறும் போட்டியாளர் யார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்பதும் இன்னும் ஒரு சில வாரங்களில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் இந்த சீசனில் டைட்டில் வின்னர் யார் என்பதை யூகிக்க முடியாத நிலையில் உள்ளது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். பிரியங்கா, ராஜூ, சிபி, தாமரை ஆகிய நால்வருக்கும் டைட்டில் பட்டம் வெல்வதற்கு சம அளவில் வாய்ப்பு இருப்பதாக இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு சீசனிலும் ரூபாய் ஐந்து லட்சத்தை பெற்று கொண்டு ஒரு போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறலாம் என்ற வாய்ப்பை போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் அளிப்பார் என்பது தெரிந்ததே. மூன்றாவது சீஸனில் கவின், நான்காவது சீஸனில் கேப்ரில்லா ரூ.5 லட்சத்துடன் வெளியேறினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐந்து லட்சம் பணத்துடன் வெளியேறும் வாய்ப்பு கொண்ட டாஸ்க் அடுத்த வாரம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சீஸனில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்த அமீர் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஐந்து லட்சத்துடன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் 5 லட்ச ரூபாய் வாய்பை பயன்படுத்தப்போவது யார்? என்பதை அடுத்த வாரம் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.