அடுத்த ரவுண்டுக்கு தயாராகுங்கள்: உலக நாடுகளுக்கு WHO எச்சரிக்கை
- IndiaGlitz, [Tuesday,September 08 2020]
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சீனா உள்பட ஒரு சில நாடுகளிலும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வருகிறது. தற்போது சுமார் 200 நாடுகளில் 2.7 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் சுமார் 9 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மனித இனம் மீண்டுவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து விடுபடும் நாள் எப்போது என்று ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த உலகம் அடுத்த பெருந்தொற்றை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார மையத்தின் தலைவர் தெரிவித்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
கொரோனா வைரஸோடு முடிந்து விடப் போவதில்லை என்றும் கொரோனா வைரஸ் கடைசி தொற்று அல்ல என்றும் அடுத்த பெருந்தொற்றை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும் என்றும் உலக சுகாதார மையத்தின் தலைவர் ரெட்ரோஸ் அதாநோம் கெப்ரியஸஸ் என்பவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையால் உலக நாடுகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்
கொரோனா வைரஸ் என்ற ஒரு வைரஸுக்கே உலக நாடுகளில் ஏராளமான உயிர்கள் பலியானதுடன் உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் இன்னொரு பெருந்தொற்றா? என்ற அச்சமே அனைவர் மனதிலும் ஏற்பட்டுள்ளது