ஜிஎஸ்டி வரியை யார் கட்டுவது? தயாரிப்பாளர்கள்-விநியோகிஸ்தர்கள் இடையே கருத்துவேறுபாடு

  • IndiaGlitz, [Monday,June 26 2017]

மத்திய அரசு வரும் 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி முறையை அமல்படுத்தவுள்ளது. பிராந்திய மொழி படங்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற தயாரிப்பாளர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதால் திரைப்படங்களுக்கு 28% வரி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த 28% வரியை தயாரிப்பாளர்கள் கட்டுவதா, அல்லது விநியோகிஸ்தர்கள் கட்டுவதா அல்லது இருவரும் பகிர்ந்து கட்டுவதா? என்பதில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்கள் சங்கத்தின் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே ஜூலையில் மாதத்தில் வெளியாகும் படங்கள் இதன் காரணமாக காலதாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ரூ.100 டிக்கெட்டுக்களுக்கு மேல் வசூல் செய்யும் திரையரங்குகள் 28% ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டிய கட்டாயம் இருப்பதால் டிக்கெட் கட்டணம் உயரும் அபாயம் உள்ளது. தயாராகின்ற படங்களில் 7% படங்கள் மட்டுமே வெற்றி பெற்று வரும் நிலையில் ஜிஎஸ்டி வரி திரைத்துறையினர்களுக்கு மேலும் ஒரு கூடுதல் சுமையாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.