விஜய் யாருக்கு ஓட்டு போடும் போது புகைப்படம் எடுத்த நபர் யார்? உளவுத்துறைக்கு தகவல் சென்றுவிட்டதா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் இன்று வாக்கு செலுத்தி கொண்டிருந்தபோது காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் புகைப்படம் எடுத்ததாகவும் இதனால் அவர் யாருக்கு ஓட்டு போட்டார் என்ற தகவல் அவருக்கு தெரிந்து விட்டதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு குடிமகன் தன்னுடைய வாக்கை செலுத்தும் நிலையில் அவர் யாருக்கு ஓட்டு போட்டார் என்பதை யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது அவரது தனிப்பட்ட உரிமை என்பதால் அதில் யாரும் தலையிடக்கூடாது என்பது அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒரு விதிமுறை ஆகும்.
இந்த நிலையில் தளபதி விஜய் இன்று வாக்கு செலுத்த வாக்கு சாவடிக்கு வந்த போது நூற்றுக்கணக்கான கேமராக்கள் அவரை சுற்றி இருந்ததால் அவர் மிகவும் கஷ்டப்பட்டு தான் வாக்கு சாவடிக்கு சென்றார். வாக்குச்சாவடிக்குள் சென்ற பின்னரும் அவர் ஓட்டு போடுவதை புகைப்படம் எடுக்க கேமராமேன்கள் குவிந்தனர் என்பதும் ஒரு கட்டத்தில் அவர் யாருக்கு வாக்களிக்க போகிறார் என்பதை கண்டுபிடிக்கும் அளவுக்கு கேமராக்கள் உயர்த்தி பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் கேமராமேன்களை தள்ளி நிற்க சொல்லி விஜய் தனிப்பட்ட முறையில் வாக்களிக்க அவர் ஏற்பாடு செய்து கொடுத்தார். அதனை அடுத்து தான் விஜய் தனது வாக்கை செலுத்தி கொண்டிருந்த நிலையில் விஜய் அருகே நின்ற காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் விஜய் யாருக்கு ஓட்டு போட்டார் என்பதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
அவர் சாதாரணமாகத்தான் வீடியோ எடுத்தாரா? அல்லது உளவுத்துறையை சேர்ந்தவரா? விஜய் யாருக்கு ஓட்டு போட்டார் என்பதை யாருக்காவது தெரிவிக்க வகையில் வீடியோ எடுத்தாரா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் விஜய் ஓட்டு போட்டதை வீடியோ எடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout