ஒரு பாலத்தையே ஆட்டைய போட்டுட்டாங்களா? ஒரு அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Thursday,June 06 2019]
இதுவரை பணம், நகைகள் தான் கொள்ளை போவதை பார்த்திக்கின்றோம், கேள்விப்பட்டிருக்கின்றோம், வடிவேலு ஒரு படத்தில் 'என் கிணத்தை காணோம்' என்று காமெடிக்கு சொல்வதையும் பார்த்திருக்கின்றோம். ஆனால் ஒரு பாலத்தையே திருடி சென்றதை இதுவரை யாராவது கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இப்படி ஒரு சம்பவம் ரஷ்யாவில் நடந்துள்ளது.
ரஷ்யாவில் உள்ள மர்ன்மாஸ்க் என்ற நகரில் போடப்பட்டிருந்த ரயில்வே பாலத்தின் ஒரு பகுதியை திடீரென காணவில்லை. 75 அடி உயரத்தில் உள்ள இந்த பாலத்தில் போடப்பட்டிருந்த இரும்புபொருட்கள் உள்பட அனைத்தையும் கொள்ளையர்கள் இரவோடு இரவாக கொள்ளையத்து சென்றுள்ளனர்.
அம்பா என்ற ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த இந்த பாலத்தில் திருடு போன இரும்புபொருட்களின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.5 லட்சம் என கூறப்படுகிறது. சுமார் 56 டன் எடைகொண்ட இந்த இரும்பு பொருட்களை 75 அடி உயரத்தில் இருந்து இறக்கி கொள்ளையர்கள் எப்படி கொள்ளையடித்தார்கள் என்பது பெரும் புதிராக உள்ளது.