WHO - தென் அமெரிக்கா கொரோனாவின் புதிய மையமாகிறது!!! கொரோனாவில் இரண்டாம் இடத்தை பிடித்த ரஷ்யா!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பாதிப்பினால் பிரேசில் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்து வரும் நிலையில் நேற்று கொரோனா பரவல் வரிசையிலும் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. தற்போது பிரேசிலின் எண்ணிக்கையை பின்னுக்குத் தள்ளி ரஷ்யா இரண்டாம் இடத்தைப் பிடித்து இருக்கிறது. ஆனாலும் பிரேசிலில் உயிரிழப்புகள் மிகவும் அதிகம் என்பதும் கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப் படுகிறது.
தற்போது, கொரோனாவின் புதிய மையமாக தென் அமெரிக்கா மாறிவருகிறது என WHO வின் அவசரகால இயக்குநர் மைக் ரியான் செய்தி வெளியிட்டு இருக்கிறார். உலக அளவில் கொரோனா பாதிப்பினால் அமெரிக்கா கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில் தென் அமெரிக்கா புதிய மையமாக இருக்கும் என மைக் ரியான் எச்சரித்து உள்ளார். பல தென் அமெரிக்க நாடுகளில் தற்போது கொரோனா எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் கவலை தரும் செய்தியாக இருக்கிறது. மேலும், அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருக்குகிறது என்ற தகவலும் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாகப் பார்க்கப் பட்டு வருகிறது. அமெரிக்காவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 1,645,353 ஆக அதிகரித்து இருக்கிறது.
அடுத்ததாக ரஷ்யாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 333,882 ஆகவும், உயிரிழப்பு 3,388 ஆகவும் பதிவாகி இருக்கிறது. பிரேசிலில் கொரோனாவினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 332,382 ஆக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. உயிரிழப்புகள் 21,116. இந்த வரிசைப் பட்டியலில் இந்தியா 11 ஆவது இடத்தை பிடித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 125,149. உயிரிழப்புகள் 3,728 ஆகவும் உறுதிப்படுத்தப் பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments