யாரெல்லாம் முகக்கவசம் அணிய வேண்டும் – WHO கூறியுள்ள புது விதிமுறைகள்!!!

  • IndiaGlitz, [Monday,June 08 2020]

 

உலகச் சுகாதார அமைப்பானது தனது முந்தைய வழிகாட்டுதல்களில் “ஆரோக்கியமான நபர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும் வயதானவர்கள், உடல்நல பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் முகக்கவசங்களை அணிந்தால் போதுமானது” என்றும் வலியுறுத்தி இருந்தது. இந்த விதிமுறைகளைத் தற்போது உலகச் சுகாதார அமைப்பு மாற்றி அமைத்திருக்கிறது. WHO வின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், “முகக்கவசங்களை 70 விழுக்காடு மக்கள் முறையாகப் பயன்படுத்தினால் நோய்த்தொற்று பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தலாம்” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், பருத்தித் துணியால் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட 3 அடுக்குக் கொண்டு முகக்கவசங்களை அனைவரும் பொது வெளியில் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறையை பரிந்துரை செய்திருக்கிறார். இந்த முகக்கவசங்களில் 3 அடுக்குகள் இருப்பதுபோல நெருக்கமான துணியைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதைபோல கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்டவர்கள் தனிமைப் படுத்துக் கொள்ளுதலும் மிகவும் அவசியம் எனவும் நோய் அறிகள் தென்பட்ட உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நோய்த்தொற்று இருப்பதற்கான அறிகுறிகளைக் கொண்டவர்கள் மற்றும் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அறுவைச் சிகிச்சை முகக் கவசங்களை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

முகக்கவசங்களை அணிந்திருப்பதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க தேவையில்லை என்ற மனநிலையில் மக்கள் செயல்படக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தி பேசினார். உலக நாடுகள் சமூக இடைவெளியை போதுமான வரை கடைப்பிடிக்க ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், பொது இடங்களில், கடைகளில், நெருக்கமான இடங்களில் முகக்கவசங்களை கட்டாயமாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் முகக்கவசத்தைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் தனது வழிகாடுதலை WHO மாற்றியமைத்து இருக்கிறது.

மேலும், தவறான முகக்கவசங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் WHO சுட்டிக் காட்டியிருக்கிறது. அதாவது தூய்மையில்லாத முகக்கவசங்களை அணியும்போது சுய மாசுபாடு ஏற்படுவதற்கு அதிக வாயப்புகள் உண்டு. அழுக்கு மற்றும் ஈரமுள்ள முகக்கவசங்களால் தோல் அலர்ஜி, அரிப்பு, தலைவலி, சுவாச பிரச்சனை போன்ற பாதிப்புகள் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. எனவே தூய்மையான முகக்கவசங்களை முறையாகப் பயன்படுத்துவதும் அவசியம். மேலும், WHO வின் கூற்றுப்படி “ நோய்த்தொற்று இல்லாத மக்களுக்கு (பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொள்ளும்போது தன்னை பாதுகாத்துக் கொள்ளலாம்) அல்லது நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட மக்களுக்கும் (பிறருக்கும் நோய்த் தொற்றை பரவாமல் இருக்க) முகக் கவசம் பயனுள்ளதாக இருக்கும்” என்றும் குறிப்பிட்டு இருக்கிறது.

சதாரண வீட்டில் உள்ள துணியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முகக் கவசங்கள் கூட அதிகப் பயனைக் கொடுக்கும் எனவும் மற்றோர் ஆய்வுச் சுட்டிக் காட்டுகிறது. இதுகுறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில் “நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் நீர்த்துளி மற்றவர்களிடம் பரவாமல் இருப்பதற்கும் முகக்கவசங்கள் அவசியம், அதேபோல நோயில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் முகக்கவசம் அவசியம்” எனக் குறிப்பிட்டு இருக்கிறது. சமூக விலகல் மற்றும், நன்கு சுத்தம் செய்யப்பட்ட பாதுகாப்பான முகக்கவசங்கள், சோப்பால் அடிக்கடி கைகக்கழுவுதல் போன்றவை நோயில் இருந்து நம்மைக் காப்பாற்றும் உக்தி என இந்திய மருத்துவக் கவுன்சில் வழிகாட்டுகிறது.

More News

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் அஞ்சலி?

நானும் ரெளடிதான்' 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய திரைப்படங்களை அடுத்து கடந்த இரண்டு வருடங்களாக வேறு எந்த திரைப்படத்தையும் இயக்காமல் இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன்

தமிழ்நாட்டில் இருந்து தனிமைப்படுத்தப்படுகிறதா சென்னை? அதிர்ச்சி தகவல்

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் தமிழகத்தின் மொத்த பாதிப்பில்

இந்தியாவில் இனவெறுப்புடன் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள பிரபல கிரிக்கெட் வீரர் டேரன் சமி!!!

மேற்கு இந்திய தீவு, கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது இனவெறியுடன் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ராயபுரத்தில் எகிறிய கொரோனா: 5 மண்டலங்களில் 2000க்கும் மேல்

தமிழகத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்பில் அதிகளவில் சென்னையில் தான் இருப்பதால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்து

கீர்த்தி சுரேஷூக்காக இணையும் த்ரிஷா, சமந்தா, மஞ்சுவாரியர், டாப்சி

நடிகையர் திலகம்' என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் அதன் பின்னர் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் அதிகம் நடித்து வருகிறார்