தல-தளபதி விவகாரம்: ஒதுங்கிய ப்ரியாமணி, ஒப்புக்கொண்ட ப்ரியா ஆனந்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடிகை ப்ரியா ஆனந்த் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அவரிடம் ’உங்களுக்கு அதிகம் பிடித்தவர் தல அஜித்தா? தளபதி விஜய்யா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘தல அஜித்’ என்று பதிலளித்தார். இந்த வீடியோவை பதிவு செய்த ஒரு டுவிட்டர் பயனாளி ‘தல அஜித் என்று கூறிய நடிகை ப்ரியாமணிக்கு வாழ்த்துக்கள் என்று கூறினார்.
உடனே நடிகை ப்ரியாமணி அந்த வீடியோவுக்கு கீழே ‘அது நானில்லை’ என்று பதிலளித்தார். இதனையடுத்து அந்த பதிவுக்கு கீழே நடிகை ப்ரியா ஆனந்த் ‘அது நான் தான்’ என ஒப்புக்கொண்டார். இந்த டுவீட்டை பதிவு செய்த அஜித் ரசிகர், ப்ரியா ஆனந்துக்கு பதில் ப்ரியாமணி என்று பதிவு செய்ததை அடுத்து இரு நடிகைகளும் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் பிரியா ஆனந்துக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.
தளபதியா தலயா?? @priyamani6 : தல தான்
— ♔ தல ரசிகன்?? (@thala_speaks) November 10, 2019
Good Morning ?? #Thala #Ajith fans
pic.twitter.com/2Eu1ZLHNs8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments