என்னை சேவ் பண்ணுங்க.. கையெடுத்து கும்பிட்ட பெண் போட்டியாளர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைத்த ஒரு டாஸ்க்கில் பெண்கள் அணி வெற்றி பெற்றதை அடுத்து பெண்கள் அணியில் நாமினேஷனில் உள்ளவர்களில் ஒருவரை காப்பாற்றலாம் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் பெண்கள் அணியை சேர்ந்தவர்கள் தங்களை காப்பாற்றுமாறு சக போட்டியாளர்களிடம் கூறும் காட்சிகள் இன்றைய ப்ரோமோ வீடியோவில் உள்ளன.
பெண்கள் அணியில் இருந்து நாமினேஷன் ஆனவர்களில் ஒருவரை காப்பாற்றுங்கள் என பிக் பாஸ் கூறியவுடன் ஜாக்குலின் ’நான் பயங்கர டேஞ்சர் ஜோனில் இருக்கேன் என்று தோன்றுகிறது. உங்களால் முடிந்தால் என்னை சேவ் பண்ணுங்கள் என்று கையெடுத்து கும்பிடுகிறார்.
இதனை அடுத்து தர்ஷா ’என்னை காப்பாற்றுங்கள் என்று கேட்பதற்கு எனக்கு உரிமை இல்லை, எனக்கு வேண்டாம்’ என்று கூறுகிறார். சௌந்தர்யா இது குறித்து கூறிய போது ’இன்னும் என்னை வெளிப்படுத்துவதற்கான நேரம் கிடைக்கவில்லை, நிலைமை வரவில்லை என்று தெரிகிறது. கண்டிப்பாக ஏதோ ஒன்று செய்யணும் என்று நினைக்கிறேன், எனவே என்னை காப்பாற்றுங்கள்’ என்று கூறுகிறார்.
இதனை அடுத்து ஜாக்குலின், சௌந்தர்யா, தர்ஷா மற்றும் சாச்சனா ஆகிய நால்வர்களில் யாராவது ஒருவரை காப்பாற்றுங்கள் என்று பிக்பாஸ் மீண்டும் கூறிய போது ஆர்ஜே ஆனந்தி யாரை காப்பாற்ற போகிறேன் என்பதை சொல்ல ஆரம்பிக்கும் நிலையில் இன்றைய புரோமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.
இந்த நிலையில் யாரை பெண்கள் அணி காப்பாற்ற போகிறது என்பதை இன்றைய எபிசோடில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
#Day12 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 18, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #VijayTelevision #VijayTV pic.twitter.com/Wdt6x7VRD5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments