டிக்டாக்கில் கலக்கி வரும் உலக சுகாதார அமைப்பு!!!
- IndiaGlitz, [Monday,March 02 2020]
பொழுது போக்குக்காக தீவிர ரசிகர்களை பெற்றிருக்கும் டிக் டாக்கில் தற்போது உலக சுகாதார அமைப்பும் இணைந்திருக்கிறது. கொரோனா தாக்கத்தைப் பற்றியும், பின்பற்ற வேண்டிய எச்சரிக்கை செயல்பாடுகள் பற்றியும் தற்போது WHO டிக் டாக்கில் விளக்கம் அளித்து வருகிறது.
உலகம் முழுவதிலும் கொரோனா அச்சம் தொற்றிக் கொண்டுள்ள நிலையில் தவறான வதந்திகளைத் தடுக்கும் விதமாக WHO இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறது. அற்புதமான நட அசைவுகளும், அரசியல் கார சாரங்களும் இந்த வீடியோக்களில் இல்லாவிட்டாலும் அதன் முதல் வீடியோவை 6.5 மில்லியன் ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள்.
Unosef, Red cross அமைப்புகளும் கொரோனா வைரஸ் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தற்போது டிக் டாக்கை பயன்படுத்த ஆரம்பித்து உள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது. தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப் படாத நிலையில், கொரோனா உலகம் முழுவதிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வந்தாலும் WHO புண்ணியத்தில் டிக் டாக்கில் நல்லதையே செய்து வருவது ஒருவகையில் வரவேற்கத் தக்கது.
@who We are joining @tiktok to provide you with reliable and timely public health advice! Our first post: How to protect yourself from ##coronavirus ?
♬ original sound - who