PS-2 ஒரு சீனில் நடித்து ரசிகர்களை கவர்ந்த மாதுளி யாரென்று தெரியுமா? சுவாரசிய தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,May 03 2023]

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் பல வரலாற்று தகவல்களை அலசி வருகின்றனர். அதே நேரத்தில் இந்தத் திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரங்களின் தேர்வுகளையும் அவர்களைப் பற்றிய சுவாரசியமான தகவல்களையும் ரசிகர்கள் ஆராய்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் PS-2 இல் பொன்னியின் செல்வனின் சித்தப்பாவாக மதுராந்தகர் கதாபாத்திரத்தில் நடிகர் ரகுமான் நடித்திருப்பார். இவர் சோழ ஆட்சிமகுடம் தமக்கே உரியது என உரிமைக்கொண்டாடி வந்த நிலையில் இவருக்கு ஆதரவாக பளுவேட்டையர்களும் சிற்றரசர்களும் உடனிருந்து ஆட்சியைப் பிடிக்க உதவிசெய்வர். அதேநேரத்தில் சோழப் பகுதியைப் பிரிப்பதில் பெரிய ஆர்வமில்லாத இவருக்கு ராஷ்டிரகூடர்கள் தாமாகவே வந்து உதவிசெய்வதுபோல காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

அந்த வகையில் ராஷ்டிரகூடர்களின் இளவரசி மாதுளியை மதுராந்தகருக்கு மணமுடித்து வைக்கலாம் என்று ஒரு கேரக்டர் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்படும். அந்த மாதுளியாக நடித்தவர் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நடனக்கலைஞர் என்பதும் அவருடைய பெயர் ஸ்ரீமா உபாத்யாயா என்பதும் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.

ஒரே ஒரு சீனில் மட்டும் நடித்திருந்த மாதுளியை மறக்காத ரசிகர்கள் அவரைத் தேடிக் கண்டுபிடித்ததோடு அவருடைய புகைப்படங்களையும் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

More News

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸ்.. அதர்வா நடிக்கும் 'மத்தகம்'  பர்ஸ்ட்லுக் ரிலீஸ்..

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல்  நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த வெப் சீரிஸான 'மத்தகம்' சீரிஸின்  ஃபர்ஸ்ட்

PS-2 – சிறுவயது குந்தவையாக நடித்தது இந்த சீரியல் நடிகையின் மகளா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

இயக்குநர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரு பாகங்களும் வெளியான நிலையில் ரசிகர்கள் கலவையான விமர்சனத்துடன்

கணவர், குழந்தையுடன்… 43 வயதில் விஜய் பட நடிகை வெளியிட்ட அழகிய புகைப்படம் வைரல்!

தமிழ் சினிமாவில் ஒரே ஒரு தீம் பாடலுக்கு மட்டும் நடனமாடி இளசுகளின் மனதில் குடிக்கொண்ட நடிகை பிபாசா பாசு தற்போது 43

ராஷ்மிகா மந்தனாவுடன் காதலா? டேட்டிங் வதந்திக்கு க்யூட் பதில் கொடுத்த சத்ரபதி நடிகர்!

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகராக வலம்வந்து கொண்டிருக்கும் நடிகர் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதுபோன்ற புகைப்படங்கள்

Cadbury Chocolate ஆல் நோய்த்தொற்றா? புதிய எச்சரிக்கையால் இங்கிலாந்தில் பரபரப்பு!

இங்கிலாந்து முழுவதும் கேட்பரி நிறுவனத்தின் பல இனிப்பு வகைகள் அந்நிறுவனத்தால் திரும்பப் பெறப்பட்டு உள்ளன.