விஜய்சேதுபதியா? யார் அவர்? ரசிகரின் கேள்வியும் கார்த்திக் சுப்புராஜின் பதிலும்!

நடிகர் விஜய் சேதுபதியை யாரென்று இன்று யாராவது கேட்டால் அவருக்கு சினிமா பற்றி எதுவுமே தெரியாது என்றுதான் அர்த்தம். ஆனால் பத்து வருடங்களுக்கு முன் விஜய் சேதுபதியை யாரென்று கேட்டால் அதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் அன்றைய காலத்தில் அவர் யாருக்கும் தெரியாத ஒருவராகத்தான் இருந்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் தனது டுவிட்டரில் நாளை ’தென்மேற்கு பருவகாற்று’ ரிலீசாக உள்ளதாகவும் அவரை பெரிய திரையில் பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறி திரையுலகை ஒரு கலக்கு கலக்கும் நடிகர் இன்று அறிமுகம் ஆகிறார் என்று ஒரு டுவீட்டை பதிவு செய்தார்.

அந்த வீட்டின் கீழே ஒரு ரசிகர் ’விஜய் சேதுபதி யார்? என்று ஒரு கேள்வியை கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த கார்த்திக் சுப்பராஜ் ’அவர் யார் என்பதை கூடிய சீக்கிரம் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்’ என்று கூறியிருந்தார்.

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட இந்த டுவீட்டை இன்று படிக்கும்போது கார்த்திக் சுப்புராஜ் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதும், அவர் அன்றே விஜய்சேதுபதியின் வளர்ச்சியை கணித்துள்ளார் என்பதும் தெரிய வருகிறது.