உண்மையான பக்திமான் யார்? நடிக சிவகுமார் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
உண்மையான பக்திமான் யார்? என்பது குறித்து நடிகர் சிவகுமார் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:
நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனா? சிவன், விஷ்ணு, ,முருகன், விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, காமாட்சி, மீனாட்சி என கடவுளைக் கும்பிடுவபவோர் பல கோடி பேர் நம் நாட்டில் இருக்கின்றார்கள். அதேபோல் அல்லா, இயேசு ஆகியோர்களை கும்பிடுபவர்களும் நம் நாட்டில் உண்டு.
கடவுளுக்கு வடிவம் இல்லை, ஆண் பெண் என்ற பேதம் இல்லை. கடவுள். என்பது உணரக் கூடிய ஒரு விஷயம். விவாதம் செய்யக் கூடிய விஷயமல்ல என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார் ஆனால் அவரே உயிரை விடும்போது ’ஹே ராம்’ என்று கூறியதாக வரலாறு. அதாவது அவர் ராமனை வணங்கி உள்ளார்.
நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். என் தந்தை ஒரு முருக பக்தர். ஒவ்வொரு கிருத்திகை அன்றும் அவர் உபவாசம் இருந்து பழனி மலை சென்று திருப்புகழின் அனைத்து பாடல்களையும் மனப்பாடமாகச் சொல்வார் நானும் அவரைப் போலவே ஐந்து வயதிலிருந்தே முருகன் பக்தனாக இருந்து வந்துள்ளேன். என்னுடைய வீட்டில் பூஜை அறையில் அனைத்து சாமிகளின் படங்களும் உள்ளன.
இந்திய மண்ணுக்கு பெருமை சேர்த்த இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகும். அந்த மாபெரும் காப்பியங்ளை பாடல் வரிகளுடன் இரண்டு மணி நேரம் 5000 பேர் முன்னாடி உரையடி உள்ளேன். யூடியூபில் இப்பொழுது கூட நீங்கள் அதனை பார்க்கலாம். உண்மையான பக்தி என்பது அடுத்தவரை நேசித்தல், அவர்களை சமமாக மதித்தல், இல்லாதவர்களுக்கு உதவி செய்தல், இதைச் செய்பவன் தான் உண்மையான பக்திமான். உயர்ந்தபக்திமான். எல்லா மதங்களும் இதைத்தான் கூறுகின்றன’ என்று சிவகுமார் கூறியுள்ளார்.
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் #சிவகுமார் பற்றியும் அவர் குடும்பத்தினர் பற்றியும் - கடவுள், மதம் சம்பந்தமாக வெளியான சில செய்திகளுக்கு அவர் பதிலளிக்கும் வகையில் , வீடியோ செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது.:) #sivakumar pic.twitter.com/OwqyvSHII0
— Johnson PRO (@johnsoncinepro) September 27, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com