ஆர்யா-ராணா-விஷால். த்ரிஷாவுக்கு பிடித்த ஹீரோ யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை த்ரிஷா ஜல்லிக்கட்டு பிரச்சனையின்போது சமூக வலைத்தளத்தில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கியிருந்தார் என்பது தெரிந்ததே. தற்போது மீண்டும் அந்த தளத்தில் புகுந்துள்ள த்ரிஷா, சற்று முன்னர் ரசிகர்களின் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்தார். இதோ ரசிகர்களின் கேள்வியும், த்ரிஷாவின் பதில்களும்...
தற்போது எந்த படத்தில் நடித்து கொண்டிருக்கின்றீர்கள்?
கர்ஜனை
'தல'யின் விவேகம் ஃபர்ஸ்ட்லுக் எப்படி?
இந்த கேள்விக்கு 'பெருமூச்சு' ஒன்றை பதில் ஆக்கியுள்ளார்
நயன்தாரா குறித்து?
சக்திமிகுந்த பெண்
தோல்விகளை எப்படி எதிர்கொள்கின்றீர்கள்?
தோல்வி செய்தி கிடைத்தவுடன் தூங்கிவிடுவேன். பின்னர் எழுந்தவுடன் ஐஸ்க்ரீம் சாப்பிடுவேன்
மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் '96' படத்தில் நடிப்பது குறித்து?
அவருடன் பணிபுரியும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்
சமீபத்திய பாடல்களில் பிடித்தது?
ஏ.ஆர்.ரஹ்மானின் 'காற்று வெளியிடை படத்தில் உள்ள அழகியே மேரி மி என்ற பாடல்
மீண்டும் தல உடன் எப்போது நடிப்பீர்கள் என்பதை மிகவும் எதிர்பார்க்கின்றேன்
நானும்தான்
சீயான் விக்ரம் குறித்து?
கடின உழைப்பாளி
'சாமி 2' படப்பிடிப்பு எப்போது?
ஜூன் முதல்
மோகினி டிரைலர் எப்போது?
கிராபிக்ஸ் பணிகள் அதிகம் உள்ளது கூடியவிரைவில்
ஏன் நீங்கள் 'குவீன்' ரீமேக்கில் நடிக்கவில்லை?
எனது சொந்த காரணங்கள்
உங்களுக்கு பிடித்தவர் யார்? ஆர்யா, ராணா அல்லது விஷால்?
சீரியஸாகவா கேட்கிறீர்கள்?
இவ்வாறு நடிகை த்ரிஷா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments