இந்த வார எலிமினேஷன் இவரா? வனிதாவின் பதிவால் பார்வையாளர்கள் குழப்பம்..!

  • IndiaGlitz, [Friday,December 01 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் வெளியேற்றப்படுவார் என்ற நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படுபவர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் வனிதாவின் பதிவால் பார்வையாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்வர்களில் மிகவும் குறைந்த ஓட்டு வாங்கியவர் அதாவது வெறும் 3 சதவீத ஓட்டு வாங்கியவர் ஜோவிகா என தெரிகிறது. இதனால் ஜோவிகா இந்த வாரம் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வனிதா தனது சமூக வலைத்தளத்தில் நீங்கள் தோல்வி அடைந்தால், முயற்சியை எப்போதும் கைவிட வேண்டாம். ஏனென்றால் கற்றலுக்கு தோல்வி என்பது முதல் படி. அதே போல் முடிவு என்பது உண்மையான முடிவு அல்ல. முடிவு என்பது “தோல்வி எப்பொழுதும் சாகாது” என்று பொருள். நீங்கள் ‘நோ’ என்கிற பதிலைப் பெற்றால் ‘நோ’ என்பது ‘அடுத்த வாய்ப்பு’ என்பதை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவை அடுத்து இந்த வாரம் ஜோவிகா தான் எலிமினேஷன் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வார எலிமினேஷன் யார் என வரும் ஞாயிறு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.