ரூ.1000 கோடி சொத்து வைத்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரின் பேத்தி யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் மத்திய அமைச்சரின் பேத்தி ஒருவருக்கு மணமகன் தேவை என்று வெளிவந்துள்ள விளம்பரம் பெரும் பரபரப்பை இணையதளங்களில் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்துள்ள விளம்பரத்த்தில் ரூ.1000 கோடி சொத்து மதிப்புள்ள முன்னாள் மத்திய அமைச்சரின் 24 வயது பேத்திக்கு மணமகன் தேவை என்றும், பி.இ படித்திருக்கும் இந்த பெண்ணுக்கு சொந்தமாக எஞ்சினியரிங் கல்லூரி இருப்பதாகவும், அது தவிர மால், பல்வேறு பிசினஸ் இருக்கும் ராயல் குடும்பம் என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விளம்பரம் தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது. அதுமட்டுமின்றி ரூ.1000 கோடி சொத்து வைத்துள்ள அந்த முன்னாள் அமைச்சர் யாராக இருக்கும் என்ற விவாதம் நெட்டிசன்களிடையே நடந்து வருகிறது. உங்களுக்கு அவர் யார் என்று தெரியுமா? தெரிந்தால் கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யவும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout