மும்பையில் 7 மணி நேரம் தண்ணீரில் நின்று பொதுமக்களை காப்பாற்றிய பெண் யார்? பரபரப்பு தகவல்
- IndiaGlitz, [Monday,August 10 2020]
கடந்த 2 நாட்களுக்கு முன்பு முன்னர் மும்பையில் பெய்த கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்றும் இதனையடுத்து மேற்கு மும்பையில் உள்ள துள்சி பைப் என்ற பகுதியில் இருந்த பாதாள சாக்கடை ஒன்று திறந்து இருந்ததால் அந்த பாதாள சாக்கடை அருகில் ஒரு பெண் சுமார் 7 மணி நேரம் வெள்ள நீரில் நின்றுகொண்டு வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டியாக இருந்தார் என்பதையும், இது குறித்த வீடியோக்கள் வைரல்ஆகியது என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது அந்த பெண் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்தப் பெண்ணின் பெயர் காண்டா மூர்டி என்றும் அவர் பூ விற்கும் வியாபாரி என்று தற்போது தெரியவந்துள்ளது. தனது உடல் நலமில்லாத கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை காப்பாற்ற தான் அந்த பகுதியில் பூ விற்பனை செய்து வருவதாகவும் சம்பவத்தன்று பாதாள சாக்கடை மூடப்படாமல் இருந்ததாகவும் அந்த பகுதியில் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபாயமாக இருக்கும் என்றுதான் கருகியதால் அந்த இடத்தில் சுமார் 7 மணி நேரம் நின்று வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்ததாகவும் கூறினார்
அதன் பிறகு மும்பை கார்ப்பரேசன் அதிகாரிகள் வந்து என்னை அனுப்பி விட்டு பாதாள சாக்கடையை சரி செய்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார் அவரது இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. தனது உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அந்தப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது