தளபதியின் திரைத்துறை தம்பி: எஸ்.ஜே.சூர்யா குறிப்பிட்டது யாரை?

  • IndiaGlitz, [Monday,December 30 2019]

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா நடித்த ;மான்ஸ்டர்; திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது ’இரவைக்காலம், ’உயர்ந்த மனிதன்’ மற்றும் ராதாமோகன் இயக்கத்தில் ஒரு படம் ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமன்றி அவரது நடிப்பில் உருவான ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை ரிலீஸ் செய்யவும் தற்போது முயற்சிகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை அதாவது டிசம்பர் 31ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை யார் வெளியிடுவார்கள் என பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஒரு சிலர் அமிதாப்பச்சன் என்றும், ஒரு சிலர் ரஜினிகாந்த் என்றும், ஒரு சிலர் நடிகர் விஜய் என்றும், சிலர் தனுஷ் என்றும் தெரிவித்துள்ளனர்

ஆனால் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிட இருப்பவர் அமிதாப்பச்சனின் சக நடிகரும், தலைவர் ரஜினியின் மருமகனும் தளபதியின் திரைத்துறை தம்பியும், சர்வதேச நடிகருமான அசுரன் தனுஷ் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளார் என்று கூறியுள்ளார்

தளபதியின் திரைத்துறை தம்பி என்ற புதிய பட்டத்தை தனுஷூக்கு எஸ் ஜே சூர்யா வழங்கியதை அடுத்து தனுஷ் ரசிகர்களும் தளபதி ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்