விஜே விஷால் எலிமினேஷனுக்கு நான் காரணமா? மாறி மாறி விளக்கம் அளித்த 2 பிரபலங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நேற்று விஜே விஷால் வெளியேற்றப்பட்ட நிலையில் இரண்டு பிரபலங்கள் மாறி மாறி அவரது வெளியேற்றத்திற்கு நாங்கள் காரணமில்லை என தங்களது சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்களில் மிகப்பெரிய ஆதரவை பெற்றது குக் வித் கோமாளி என்பதும் தற்போது இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த வாரம் எலிமினேஷன் சுற்றில் விஜே விஷால், ஷெரின் மற்றும் ஷிவாங்கி ஆகிய மூன்று பேர் வந்த நிலையில் ஷெரின் முதலிலேயே காப்பாற்றப்பட்டார். இதனால் ஷிவாங்கி மற்றும் விஜே விஷால் ஆகிய இருவரில் ஒருவர் தான் எலிமினேஷன் செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் விஜே விஷால் எலிமினேட் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு முறை மிகவும் நன்றாக சமைத்தார் என்று விருது வாங்கிய விஜே விஷாலை வெளியேற்றுவது அநீதி என்றும் ஷிவாங்கியை காப்பாற்றுவதற்காகவே விஜே விஷாலை வெளியேற்றி உள்ளார்கள் என்றும் பலர் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்த ஷிவாங்கி ’இந்த சீசன் துவங்கியதில் இருந்து நான் எப்படி சமைக்கிறேன் என்ற விமர்சனங்கள் நிலவி வருகின்றன. நான் தினமும் 7 மணி நேரம் பயிற்சி செய்கிறேன், நான் மட்டுமின்றி பங்கேற்கும் எல்லோரும் கடுமையாக உழைத்து தான் பயிற்சி செய்து வருகிறோம். ஒருவரை குறைவாக மதிப்பிடுவது நல்லதல்ல. அந்த நாள் நல்லதாக இருந்து, கடின உழைப்பும் கை கொடுத்தால் தான் உணவு சிறப்பாக வரும், அப்படி இல்லை என்றால் அது எனக்கான நாளில்லை என்று தான் நான் எடுத்துக் கொள்வேன்’ என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் விஜே விஷாலுக்கு கோமாளியாக வந்த மோனிஷா சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால்தான் அவர் வெளியேற்றப்பட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு மோனிஷா கூறிய போது ’விஜே விஷால் எலிமினேசனுக்கு என்னை பலரும் குற்றம் சாட்டுகின்றனர். அவர்களுக்காக நான் ஒன்று சொல்கிறேன். என்னதான் ஃபன் ஆக இருந்தாலும் யாருக்கு கோமாளியாக சென்றாலும் நான் என்னால் முடிந்தவரை உதவி செய்து அவரை காப்பாற்ற முயற்சிப்பேன். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இது ஒரு வெறும் ரியாலிட்டி ஷோ என்பதை அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout