கைகொடுக்காத கட்டிப்பிடி வைத்தியம்: செண்ட்ராயன் பரிதாபம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டின் தலைமை பொறுப்பு நேற்றுடன் நித்யாவுக்கு முடிவுக்கு வந்தது. இதுகுறித்த அறிவிப்பு வந்தவுடன் நித்யா மிகுந்த சந்தோஷம் அடைந்தார். அவர் கடந்த வாரம் தலைவியாக இருந்தபோது என்ன செய்தார் என்று பார்வையாளர்களுக்கும் தெரியவில்லை, போட்டியாளர்களுக்கும் தெரியவில்லை என்பது வேறு விஷயம்.
இந்த நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்ய செண்ட்ராயன், வைஷ்ணவி ஆகியோர்களுக்கு சீக்ரெட் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. யார் அதிகமாக மற்ற போட்டியாளர்களை கட்டிப்பிடிக்கின்றாரோ அவரே இந்த வார தலைவர். ஆனால் சீக்ரெட் என்பதன் அர்த்தம் தெரியாமலோ என்னவோ செண்ட்ராயன் அனைவரையும் தன்னை கட்டிபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால் அவர் பரிதாபமாக தகுதியிழந்தார். எனவே வைஷ்ணவி இந்த வார தலைவியாக பொறுப்பேற்கிறார்
மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் எவிக்சன் பட்டியலும் தயாரானது. ஏற்கனவே இந்த பட்டியலில் நித்யா, அனந்து ஆகியோர் இருந்தனர். டேனியல், ரித்விகா ஆகியோர் டாஸ்க்கை சரியாத செய்ததால் எவிக்சன் பட்டியலில் சேர்க்க முடியாது. அதேபோல் தலைவி வைஷ்ணவியையும் சேர்க்க முடியாது என்பதால் மும்தாஜ், பொன்னம்பலம் மற்றும் பாலாஜி ஆகியோர் எவிக்சன் பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டனர். எனவே நித்யா, அனந்து, பாலாஜி, பொன்னம்பலம், மும்தாஜ் ஆகியோர்களில் ஒருவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.
பாலாஜி, நித்யா சண்டையை வைத்து இன்னும் சில வாரங்கள் ஓட்ட வேண்டியிருப்பதால் இருவரும் வெளியேற வாய்ப்பு குறைவு. அதேபோல் மும்தாஜூக்கு பார்வையாளர்கள் மற்றும் மும்தாஜ் ஆர்மியினர்களின் ஆதரவு அதிகம் இருப்பதால் அவரும் வெளியேற்றப்பட வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. எனவே அனந்து அல்லது பொன்னம்பலம் ஆகிய இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments