பிக்பாஸ் வீட்டிற்கு வரும் புதிய நபர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு அல்லது மூன்று வாரம் அமைதியாக சென்று கொண்டிருந்தாலும் அதன் பின்னர் இரண்டு குரூப்புகள் பிரிந்து யுத்த களமாக மாறுவது வழக்கமான ஒன்று. குறிப்பாக டாஸ்க் ஆரம்பித்துவிட்டால் போட்டியாளர்களிடையே போட்டியும் பொறாமையும் உண்டாகி ரணகளமாவது உண்டு

ஆனால் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பிரச்சனைக்குரியவர்கள் அதிகம் இருப்பது போல் தெரிவதால் வெகுசீக்கிரம் யுத்தகளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் அபிராமி, சாக்சி மற்றும் ஷெரின் மூவரும் ஜாலியாக 'பாப்பா பாடும் பாட்டு' என்ற பாடலை பாடி கொண்டிருக்க அதை பார்த்த சாண்டி, 'அனேகமாக இந்த வீடு அடுத்த வாரம் யுத்தகளமாக மாறும் என்று நினைக்கின்றேன். அந்த யுத்தத்தில் நானும் இருப்பேன் என்று நினைக்கின்றேன்' என்று கூறுகிறார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் முதல் யுத்தம் சாண்டி அல்லது வனிதாவால் வரவும், இவர்கள் இருவரும் தனித்தனி அணியாக பிரியவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இருவரும் ஒரே அணியில் தப்பித்தவறி இருந்துவிட்டால் எதிர் அணிக்கு வில்லங்கம் தான்

மேலும் இன்றைய புரமோவில் 'இன்னைக்கி யாரோ புதுசா வர்றாங்க போலயே' என்ற வாசகம் இருப்பதும், பிக்பாஸ் வீட்டின் வெளிக்கதவு திறக்கும் காட்சியும் இருப்பதால் புதிய நபர் வீட்டிற்குள் வரும் காட்சியும் இன்று உண்டு என தெரிகிறது. வைல்ட் கார்ட் எண்ட்ரியா? அல்லது விருந்தினரா? என்பதை இன்று இரவு நிகழ்ச்சியில் பார்ப்போம்
 

More News

யோகிபாபுவின் 'தர்மபிரபு' படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்

கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு தற்போது ஒருசில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

எனக்கு யாருமே இல்லை: கதறி அழும் மோகன் வைத்யா!

பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படியாவது முதல் நாளில் இருந்து 100வது நாள் வரை பரபரப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்று திட்டமிடும் பிக்பாஸ் திரைக்கதை குழுவினர்

விஜய்சேதுபதி படத்தில் இருந்து வெளியேறிய அமலாபால்! உள்ளே வந்த சிம்பு பட நடிகை!

விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் 33வது படத்தை வெங்கடகிருஷ்ண யோக்நாத் இயக்கவிருப்பதாகவும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அமலாபால்

அடுத்த ஓவியா-ஆரவ்வா அபிராமி-கவின்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் ஓவியா-ஆரவ் காதலும், பிக்பாஸ் இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா காதலும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை கொடுத்தது.

சாக்சிக்கு பொங்கல் வைத்த வனிதா!

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஆரம்பத்தில் 'ஆனந்தம்' மம்முட்டி குடும்பம் போல் ஒற்றுமையாக இருப்பதும் போகப்போக 'சம்சாரம் அது மின்சாரம்' விசு குடும்பம் போல் ரணகளமாவது வழக்கமான ஒன்றே